t> கல்விச்சுடர் ஒரு ஸ்பூன் நெய்க்குள் ஒளிந்திருக்கும் ஓராயிரம் நோய் குணமாக்கும் தன்மைகள் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

2 August 2021

ஒரு ஸ்பூன் நெய்க்குள் ஒளிந்திருக்கும் ஓராயிரம் நோய் குணமாக்கும் தன்மைகள்




பாலும் நெய்யும் நமது இந்திய உணவுப் பழக்கங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

இவை இரண்டும் பல வகைகளில் நமது உடல் நலத்திற்கு நன்மைகள் புரிகின்றன. அதனை இரவில் குடிப்பதனால் உடலுக்கு நல்ல அற்புதபயனை வழங்குகின்றது.

அந்தவகையில் பாலுடன் நெய் கலந்து குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

பாலும் நெய்யும் சேர்ந்த கலவையை இரவு நேரங்களில் அருந்தும் போது இவை இரண்டும் உடலின் செரிமானத்திற்கும், அதிகளவு உட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வதற்கும் பெரிதளவு உதவி புரிகின்றது. எனவே, இவை இரண்டும் நிம்மதியான தூக்கத்திற்கு வழி வகுக்கின்றன.


தூக்கமின்றி தவிப்பவர்கள் மறுநாள் தலைவலியால் தலையில் கை வைக்காமல் இருக்கவும் ,நோய்களால் அவதியுறும்போது நன்றாக இருக்கிறேன் என்று அனைவரிடமும் பொய் பேசுவதையும் நெய் தடுக்கிறது. ஏனெனில் நெய் சாப்பிடுவதால் பல நோய்களை விரட்டலாம்

தினமும் ஒரு கிளாஸ் பாலுடன், ஒரு ஸ்பூன் நெய் கலந்து அருந்தி வருவது உடலின் செரிமான அமைப்பை மிகவும் பலப்படுத்தும்.

நெய் கலந்த பாலை நாம் தினமும் அருந்தும் போது அவை இரண்டும் நமது உடலின் வளர்சிதை மாற்ற அமைப்பின் செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன.

தினமும் இரவில் நெய் கலந்த பாலினை அருந்துவதன் மூலம் அந்த வலிகளிலிருந்து விடுபடலாம். நெய்யானது செயல்பட்டு மூட்டு வலியினை குறைக்க உதவுகின்றது.

தினமும் இரவில் நெய் கலந்த பாலினை அருந்துவதன் மூலம் அந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம். இந்த இரண்டு பொருட்களும் நம்மை வெகுவிரைவாக தூங்கவைக்கும்.

உடல் மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்கள், இந்த நெய் கலந்த பாலினை அருந்துவதன் மூலம் விரைவில் உடல் எடையினைக் கூட்டி நலமுடன் வாழலாம்.

பாலூட்டும் தாய்மார்கள் இந்த நெய் கலந்த பாலினை தினமும் அருந்தி வர நல்ல பயனைக் கொடுக்கும்

எடையைக் குறைக்க நெய் உதவியாக இருக்கிறது. நெய் என்பது கொழுப்பு சத்தின் ஆரோக்கியமான மூலமாக இருக்கிறது. எனவே நாம் எடையிழக்க வேண்டுமென்று அதை உணவில் இருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை.

உடல் எடையை குறைக்க நெய்யை எப்படி பயன்படுத்தலாம்?

ஒரு ஸ்பூன் நெய் தினமும் எடுத்துக் கொண்டால் எடை குறைப்புக்கு இது உதவியாக இருக்கும்.

அதிகபட்சம் தினமும் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிடுவது நல்லது.

அதை விட அதிகமாக எடுக்க வேண்டாம். ஏனெனில் அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது தான் எடை  அதிகரிக்கும் பிரச்சனை ஏற்படும்.

நெய்யைக் குழந்தைககளுக்குக் கொடுத்தால், உடற்பருமனாகி விடுவார்களோ என அச்சப் படுகிறார்கள். உண்மை என்ன தெரியுமா? ஓட்டமும் விளையாட்டுமாக இருக்கும் குழந்தைககளுக்கு செரிமானம் செய்யும் அளவுக்கு ஜீரண சுரப்பிகள் நன்றாக வேலை செய்யும். இதனால், வெண்ணெயிலும் நெய்யிலும் இருக்கும் புரதமும் கொழுப்பும் எனர்ஜியாக மாறி, பிள்ளைகளைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். வெண்ணெயும் நெய்யும் குழந்தைகளை குண்டாக்கிவிடும் என்றே பயமே தேவையில்லை.

நம் ஊரில் வெயில் காலம்தான் நீண்டதாக இருக்கிறது. இதனால், குழந்தைகள் உடல் சூட்டால் கஷ்டப் படுவார்கள். நெய்யில் இருக்கும் கொழுப்பு, மாரடைப்பை ஏற்படுத்தும். அதனால், குழந்தை பருவத்திலேயே அவாய்டு செய்து விடலாம் என நிறைய அம்மாக்கள் முடிவெடுத்து விட்டார்கள். உண்மை தெரிந்தால், பிள்ளைகளுடன் சேர்ந்து அம்மாக்களும் உணவில் சேர்த்துக் கொள்வார்கள். நெய்யில் இருக்கும் கொழுப்பானது, ரத்த நாளங்களின் உள்சுவர்களில் படியாத தன்மையைக் கொண்டது. அப்புறம் எப்படி ரத்தநாளங்களின் உள் சுவரை சுருக்கி, ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தும்?

நெய்யைச் சாப்பிடுவதற்கு ஒரு நடைமுறை இருக்கிறது. வெண்ணெயைக் காய்ச்சும் போது, முருங்கையிலையைப் போட்டுக் காய்ச்சுவார்கள். முருங்கையிலையில் இருக்கும் பைட்டோ கெமிக்கல்ஸ், நெய்யில் இருக்கும் கொழுப்பு மூலக் கூறுகளை தனித்தனியே பிரித்து விடும். சுடு சாதத்தில் போட்டுப் பிசையும் போதும், தோசையைச் சுற்றிலும் விடும் போதும் நெய்யானது உருகி, மறுபடியும் அதன் கொழுப்பு மூலக்கூறுகள் தனித்தனியாக பிரிய ஆரம்பிக்கும். இந்த முறையில் நெய்யை உங்கள் குழந்தைகளுக்குத் தினமும் ஒரு டீஸ்பூன் அளவுக்குக் கொடுத்து வந்தால், அவர்களின் உடம்பு, தேவையான சத்துக்களை உணவுகளிலிருந்து பெற்று வலுவாக மாறும். ஜீரணத் தொந்தரவுகள் வராது.  மந்தமும் ஏற்படாது.

நெய்க்கு இன்னொரு நல்லத் தன்மையும் இருக்கிறது. குழந்தைகளின் சின்னச் சின்ன எலும்புகளுக்கும் மூட்டுகளுக்கும் இடையில் நல்ல லூப்ரிகேஷனை ஏற்படுத்தும். பெண்களுக்கும் கை, கால் மற்றும் கழுத்து எலும்புகளில் முப்பதுகளிலேயே வரக்கூடிய ஸ்பான்டிலிட்டிஸ் பிரச்னைகளைத் தடுக்கும்.

JOIN KALVICHUDAR CHANNEL