t> கல்விச்சுடர் ருசி நிறைந்த இஞ்சி குழம்பு செய்வது எப்படி? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

7 August 2021

ருசி நிறைந்த இஞ்சி குழம்பு செய்வது எப்படி?




இஞ்சியில் நாம் இன்று வித்தியாசமான ஒரு சமையல் ரெசிபியினைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.


தேவையான பொருட்கள்:

இஞ்சி – கால் கிலோ

தேங்காய் – 5 துண்டுகள்

புளி – நெல்லிக்காய் அளவு

பூண்டு – 1

மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்

தனியா தூள் – 2 ஸ்பூன்

சீரகம் - ½ ஸ்பூன்

வெந்தயம்- 1/2 ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு – 1 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய்- 5,

மிளகு - ½ ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.


செய்முறை:

இஞ்சியை தோல் சீவி நறுக்கி எண்ணெயில் வதக்கவும். அடுத்து மிக்சியில் தேங்காய், இஞ்சி, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.


அடுத்து சீரகம், வெந்தயம், மிளகு மூன்றையும் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.

அடுத்து வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகுபோட்டு தாளித்து அரைத்த பேஸ்ட் மற்றும் அரைத்த பொடி சேர்த்து கிளறவும்.
அடுத்து இதில் மிளகாய்த் தூள், தனியாத் தூள், தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால் இஞ்சி குழம்பு ரெடி…!!



JOIN KALVICHUDAR CHANNEL