டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து வெண்கலப்பதக்கம் வென்றார்.
பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது இடத்திற்கான போட்டியில் சீன வீராங்கனை ஹி பிங்ஜியாவுடன் பிவி சிந்து மோதினார்.
விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் பிவி சிந்து 21- 13, 21-15 என்ற நேர் செட் கணக்கில் ஹி பிங்ஜியாவை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.
இந்த வெற்றியின்மூலம் அடுத்தடுத்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் சிந்து. ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு, 2016ல் பிரேசில் நாட்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது
