t> கல்விச்சுடர் ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத, வைக்கத் தேவையில்லாத உணவுப் பொருட்கள்.! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

23 August 2021

ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத, வைக்கத் தேவையில்லாத உணவுப் பொருட்கள்.!




ஃபிரிட்ஜ் வருகைக்கு முன்பு வீட்டில் இட்லி, தோசைக்கு மாவு அரைத்தால் அதை இரண்டாவது நாள் பயன்படுத்துவதே கூட கடினமாக இருக்கும்.


ஆனால், காய்கறி, இறைச்சி, முட்டை, தயிர், மாவு, நேற்று வைத்த குழம்பு என பலவும் ஃபிரிட்ஜை ஆக்கிரமித்துள்ளன. மாவு, தயிர், காரக்குழம்பு என சில உணவுகள் வைப்பது ஒகே தான். ஆனால் சில உணவுப் பொருட்களுக்கு ஃபிரிட்ஜ் தேவையில்லை. அப்படியான உணவுகள் பற்றி பார்ப்போம்.

பலரும் ஃபிரிட்ஜில் எலுமிச்சை பழத்தை வைத்திருப்பார்கள். நீண்ட நாள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அப்படி வைப்பார்கள். இது தேவையற்றது. சிட்ரஸ் பழங்களை ஃபிரிட்ஜில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதே போல் கிவி, அன்னாசி, மாம்பழம் வெப்பமண்டல பருவ கால பழங்களை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். அவற்றை அறை வெப்பநிலையில் வைத்தாலே கெட்டுப்போகாமல் இருக்கும். அதே நேரத்தில் பழத்தை வெட்டிவிட்டால் அதை ஃபிரிட்ஜி; வைக்கலாம். இப்படி வைப்பதால் பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிரி தொற்றில் இருந்து காக்கலாம்.

பெரும்பாலானவர்கள் வெங்காயத்தை ஃபிரிட்ஜில் வைப்பது இல்லை. சிலர் அதையும் வைப்பார்கள். இது தேவையில்லாதது.

தேனை கூட சிலர் குளிர்பதன பெட்டியில் வைப்பது உண்டு. பல ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாமல் இருக்கும் உணவு தேன். நன்றாக இறுக்கமாக மூடி பாதுகாப்பான இடத்தில் வைத்தாலே போதும். அதற்கு ரெஃப்ரிஜிரேட்டர் தேவையில்லை. ஃபிரிட்ஜில் வைப்பதால் தேன் இறுகி, பயன்படுத்த முடியாததாக மாறிவிடும்.

பல வீடுகளில் தக்காளியை வாங்கி ஃபிரிட்ஜில் வைத்துவிடுவார்கள். தக்காளியை அவ்வப்போது வாங்குவது நல்லது. அறை வெப்பநிலையிலேயே 2 – 3 நாட்கள் அது தாக்குப்பிடிக்கும். ஃபிரிட்ஜில் வைக்கும் போது அதில் உள்ள வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் சிதையும். அதன் சுவை, தன்மை பாதிக்கப்படும்.

அதே போன்று உருளைக்கிழங்கும் ஃபிரிட்ஜில் வைக்கத் தேவையில்லாத காய்கறியாகும். ஃபிரிட்ஜில் வைக்கும் போது அதில் உள்ள ஸ்டார்ச் மிக வேகமாக சர்க்கரையாக மாறிவிடும். இப்படி மாறுவது அவற்றை வேக வைக்கும் போது, எண்ணெய்யில் பொரிக்கும் போது புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சாக மாறிவிடும். எனவே, உருளையை அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும்.

வாழைப் பழத்தை யாரும் ஃபிரிட்ஜில் வைப்பது இல்லை. யாராவது வைத்தால் இனி வைக்க வேண்டாம். அப்படி வைப்பது தவறானது. வாழை பெரும்பாலும் முழுவதும் பழுக்காத நிலையில் வாங்குவது உண்டு. ஃபிரிட்ஜில் வைப்பது வாழைப் பழம் பழுப்பதை தாமதப்படுத்தும். மேலும் வாழைப்பழம் கனியும் போது அதில் இருந்து வாயுக்கள் வெளிப்படும். இது மற்ற உணவுப் பொருட்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே, வாழையை மற்ற பழங்களோடு இல்லாமல் தனித்தே வைப்பது நல்லது.



JOIN KALVICHUDAR CHANNEL