t> கல்விச்சுடர் தினமும் தலைக்கு குளிப்பதால் தலை முடிக்கு பிரச்சினை வருமா? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

11 August 2021

தினமும் தலைக்கு குளிப்பதால் தலை முடிக்கு பிரச்சினை வருமா?





சரும பாதுகாப்பில் தலைமுடி பராமரிப்புக்கு இன்று பெரும்பாலோர் முக்கியத்துவம் கொடுத்து வருகின்ற நிலையில், ஆண்கள் தங்கள் தலைமுடி அழகாகவும், கருமையாகவும், பெண்கள் தங்கள் தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதுண்டு.

இதில், தலைமுடியானது, கோரை முடி, சுருள்முடி, வறண்ட முடி, மென்மையான முடி, அலையலையான முடி என பல்வேறு விதத்தில் இருக்கிறது. இவ்வாறு வித்தியாசமான முடி வகைகள் இருப்பதில், அன்றாடம் குளிக்கும்போது தலைக்கு குளிப்பதால் தலைமுடிக்கு பிரச்சனை வருமா என்று பலருக்கு கேள்வி வரும். அதையடுத்து, தினமும் தலைக்கு குளிக்க வேண்டுமா என்றும், அதனால் என்ன பாதிப்பு வரும், தலைமுடி பராமரிப்பு என்ன செய்யலாம் என்றும் பார்க்கலாம்.


தினமும்

சிலருக்கு, தலைமுடி மிகவும் பிசுபிசுப்பாக எண்ணெய் பசையுடன் காணப்படுவதால் அதை அலச வேண்டியிருக்கும்.

புத்துணர்வுடன் இருப்பதற்காக, சிலர் தினமும் தலைக்கு குளிப்பதுண்டு.

தினமும் தலைக்கு குளிப்பது பார்ப்பதற்கு, எந்த விளைவையும் ஏற்படுத்தாத சாதாரண செயல் போல தோன்றினாலும், அது தலைமுடிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பாதிப்புகள்

தலைமுடியை அதிகமாக அலசினால் முடியின் வேர்க்கால்கள் மிகவும் பலவீனமாகி அதிகமாக முடி உதிர வாய்ப்புகள் அதிகம்.

தலைமுடி ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்க எண்ணெய்ப்பசை அவசியம். ஆனால், தலைமுடியை அடிக்கடி அலசுவதால், எண்ணெய் பசை குறைந்து வறட்சியாகும்.

தலை முடியில் எண்ணெய் பசை குறைந்தால் முடியின் நுனிகளில் வெடிப்பு அல்லது பிளவு ஏற்படும். பிளவு முடி அதன் வளர்ச்சியை குறைக்கும்.

தலை முடியை அடிக்கடி அலசுவதால் சரும வறட்சி ஏற்பட்டு பொடுகை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இது அதிக அளவிலான முடி உதிர்விற்கு வழி வகுக்கும்.

அதிகமாக தலையை அலசுவதால் சரும ஈரப்பதம் குறைந்து தலை, அரிப்பை ஏற்படுத்தும்.

ஷாம்பூவில் உள்ள இரசாயனங்கள், தலையின் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புகள் இருப்பதால், அதிகம் ஷாம்பூ பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

அதிகம் தலைமுடியை அலசுவதால் முடியின் நடுப்பகுதியில் பலவீனம் அடைந்து, உடைந்து விட வாய்ப்புண்டு. இதை தவிர்ப்பதற்கு, தினமும் தலைக்கு குளிக்காமல் இருப்பது நல்லது.

பராமரிப்பு

செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும்.

தலைமுடி செழித்து வளர வாரம் ஒருமுறை தலைக்கு வெண்ணெய் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.

செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

கடுக்காய், செம்பருத்தி பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி கூந்தலில் தடவினால் தலைமுடி நன்றாக வளரும்.

வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் தேய்த்து, ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.


JOIN KALVICHUDAR CHANNEL