தமிழகத்தில் இன்று மேலும் 1,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: –
தமிழகத்தில் மேலும் 1,512-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 14 ஆயிரத்து 872- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இன்று 1,725- பேர் குணம் அடைந்துள்ளனர்.
தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 22-பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய 1 லட்சத்து 51 ஆயிரத்து 012- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16,850- ஆக குறைந்துள்ளது.




