*கொழுப்பைக் கரைக்கும் வாழைத்தண்டு சூப் செய்முறை!
இன்றைய நிலையில் உடல் பருமனால் பலரும் அவதிப் படுகின்றனர். அவ்வகையில் உங்களது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க சிறந்த நிவாரணி வாழைத் தண்டு சூப்.
இந்த சூப்பானது,
கொழுப்பைக் கரைக்கும்.
வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும்.
சிறுநீர் எரிச்சலைப் போக்கும்.
சிறுநீர் பாதையில் கல் அடைப்பு இருப்பவர்களுக்கு மிகச் சிறந்தது.
இத்தகைய சூப் தயாரிக்கும் முறையை அறிந்து கொள்வோம் வாருங்கள்.
தேவையானப் பொருட்கள்:
வாழைத்தண்டு – 1 கப் (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1
மிளகாய் வற்றல் – 2
மஞ்சள் தூள் – சிறிதளவு
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 5
சின்ன வெங்காயம் – 5
இஞ்சி – 1 துண்டு
பூண்டு பல் – 2
கொத்தமல்லி, கறிவேப்பிலை – தேவையான அளவு
தனியா – 1 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 தேக்கரண்டி.
செய்முறை:
வாழைத்தண்டை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
6 கப் நீர் விட்டு சிறுதீயில் கொதிக்க விட வேண்டும்.
தனியா, சீரகம், மிளகு மூன்றையும் தனித்தனியாக வறுத்து பொடிக்க வேண்டும்.
வெங்காயம், தக்காளி, மிளகாய் வற்றல், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு ஆகிய அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும்.
வாழைத்தண்டு பாதி வெந்திருக்கும் போது வதக்கிய கலவையையும், பொடி செய்த தூள், மஞ்சள், உப்பு சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விட வேண்டும்.
கடைசியாக கொத்தமல்லி, கறிவேப்பிலை சிறிது தூவி இறக்க வேண்டும். சுவையான வாழைத்தண்டு சூப் தயார்.
