t> கல்விச்சுடர் பள்ளிகள் நேரம் குறைப்பு - சற்றுமுன் புதிய அறிவிப்பு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

31 August 2021

பள்ளிகள் நேரம் குறைப்பு - சற்றுமுன் புதிய அறிவிப்பு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி!




நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி!

நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 மணிக்கு தொடங்கும் வகுப்புகளை மதியம் 3.30 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார். 


40-45 நாட்களுக்கு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி மட்டுமே வழங்கப்படும். வகுப்பறையில் மேஜையின் ஒருமுனையில் ஒரு மாணவரும், மறுமுனையில் மற்றொரு மாணவரும் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மாணவர்கள் நிச்சயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும்; 

ஒவ்வொரு
வகுப்பறையிலும் கிருமிநாசினி பாட்டில் வைத்திருக்க வேண்டும்

ஒரு நாளில் 5 வகுப்புகள் மட்டும் செயல்படும்

விளையாட்டு நேரம் கிடையாது

காலை 9.30 மணிமுதல் மாலை 3.30 மணிவரை
வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும்


தொடக்கம் முதலே பாடம் நடத்தப்படாது; 

மாணவர்கள் உளவியல்
ரீதியாக தயாரான பின்னரே பாடம் நடத்தப்படும்

பெற்றோர்கள், மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை
மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும்

JOIN KALVICHUDAR CHANNEL