t> கல்விச்சுடர் பழைய ஓய்வூதியம் கொண்டு வருவதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெற செய்ய கோரிஅரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

12 August 2021

பழைய ஓய்வூதியம் கொண்டு வருவதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெற செய்ய கோரிஅரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள்

நூறு நாட்கள் கூட ஆகவில்லை ஐந்து வருட கால வாக்குறுதியை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் மக்கள், இந்தியாவே திரும்பி பார்க்கின்ற முன்மாதிரி முன்னோடி முதலமைச்சராக ஓய்வறியாமல் உழைக்கும் கலைஞர் ஐயாவின் மறு உருவம் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களோடு நன்றி சொல்ல கடன் பட்டிருக்கின்றோம்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி கொரோனா நிதி ரூ. 4000/- கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் படிப்பு பராமரிப்புச் செலவு , மகளிர் இலவசப் பேருந்து பயணம் , கொரோனா பணியில் இறந்த முன் களப் பணியாளர்கள் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை , பணியாற்றுபவர்களுக்கு ஊக்க ஊதியம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பல ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு , காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை உள்ளிட்ட திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்
~~~
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் கோரிக்கைகள்
~~~~~

அ.தி.மு.க ஆட்சியில் 2003 ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அனைவரையும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணி நியமனம் செய்து வருகின்றனர், இதனால் ஓய்விற்கு பிறகு மாதம் மாதம் ஊதியத்தில் 10% விழுக்காடு பிடித்தம் செய்யும் அதே தொகையை அரசு செலுத்தி ஒரு சிறு தொகையாக வழங்கிறார்கள், இந்த தொகை ஓராண்டு காலத்திற்கு கூட அனுபவிக்க முடியவில்லை, ஏனெனில் இதை நம்பி பலர் கடன் பெற்று அவர்களின் வாரிசுகளின் படிப்பு திருமணம் சுக துக்க நிகழ்வுகளுக்கு கடன் பெறுகின்றனர், அந்த தொகை கடனை அடைக்கவே சரியாகிவிடுகிறது, கடைசி காலத்தில் ஒரு வேலை உணவிற்கே திண்டாடும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள், அவர்களின் நிலையை கருத்தில் கொண்டு பழைய ஓய்வூதியம் திட்டத்தை கொண்டு வந்தால் ஓய்வுபெறும் காலத்தை கஷ்டமில்லாமல் பார்த்துக்கொள்ள உதவும்,

உயர்நிலை மேனிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தவேண்டும், மத்திய அரசிற்கு இணையாக ஊதியம் வழங்க வழிவகை செய்து உதவிட வேண்டும்.


தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான மேற்டிப்பிற்கான பின்னேற்பு ஆணையை வழங்கி உதவிட வேண்டும்.

அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பொது மாறுதல், மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் , சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் 2009 ஆண்டு பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் ஊதிய முரண்பட்டை கலைய வேண்டும். 2004 - 2006 இடைப்பட்ட தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக மாற்ற வேண்டும்

12000 கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கடந்த 10 ஆண்டாக மாதம் ரூ,7,700/- என்ற தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர், அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கான தகுதித் தேர்வை நடத்தி அனைவரையும் பணி நிரந்தரம் செய்து உதவிட வேண்டும்.

கருணை அடிப்படையில் பல ஆண்டுகளாக வேலை வழங்கப்படாத வாரிசுதாரர்களுக்கு மறு ஆய்வு செய்து பணியாணை வழங்கி உதவி செய்ய வேண்டும் , அறநிலையத்துறை உள்ளிட்ட பல துறைகளில் கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர்களாக பணி நியமிக்கப்பட்டு பணியாற்றுபவர்ளுக்கு இதுவரை பணி நிரந்தரம் பணிவரன் முறை செய்யப்படவில்லை, இக்கோரிக்கையை ஏற்று அவர்களை முறைப்படுத்த வேண்டும்.

மருத்துவத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் முன்களப் பணியாளர்களான செவிலியர்கள்,பல்னோக்கு மருத்துவ பணியாளர்கள், 108 அவசர ஊர்தியில் பணியாற்றும் ஊழியர்கள் போன்றோர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்,

வேளாண்மைத் துறையில் பணியாற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் , ஐ.டி.ஐ , பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் பயிற்றுனர்களின் ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும்.

ஆதிதிராவிடர் நலத்துறை , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களான தூய்மை பணியாளர்களை சிறப்பு காலமுறை ஊதியத்தில் இருந்து காலமுறை ஊதியமாக மாற்றி அமைக்க வேண்டும்.

வேளாண்மைத் துறையில் நியமிக்கப்படும் உதவி வேளாண்மை அலுவலர் பதவிகளை டிப்லோமோ படித்தவர்களையே முழுமையாக நியமிக்க வேண்டும்,வேளாண்துறையில் பல ஆண்டுகளாக தின கூலிகளாக பணியாற்றிவருபவர்களை கடந்த ஆட்சியாளர்கள் பணி நிரந்தரம் செய்யவில்லை அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

அனைத்து அடிப்படை பணியாளர்களை மாவட்ட வேலைவாய்ப்பு மூலமாக பதிவுமூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும்.

ஒன்றிய அரசு அறிவித்த 11% விழுக்காடு அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும்.

ஆசிரியர்கள் நியமனத்தில் வயது வரம்பை நீக்க வேண்டும், ஆசிரியர்கள் தகுதி தேர்வின் தேர்ச்சி சான்றிதழை நிரந்தர சான்றாக மாற்றி உதவிட வேண்டும், ஆகிய முக்கிய கோரிக்கைகளை நிதிநிலை அறிக்கையில் இடம்பெறச் செய்ய உழைப்பின் உச்சம் மாண்புமிகு இந்தியாவின் முதன்மை முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

சா.அருணன்,
நிறுவனத் தலைவர்,
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

JOIN KALVICHUDAR CHANNEL