t> கல்விச்சுடர் தங்கத்தின் மறுபெயர் நீரஜ் - சீனி.தனஞ்செழியன் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

7 August 2021

தங்கத்தின் மறுபெயர் நீரஜ் - சீனி.தனஞ்செழியன்




இதோ
130 கோடிகளில் இருந்தோர் தங்கச்சிங்கம்
இந்தியத் தாய் இப்போது தலைநிமிர்வாள்

கூர்தீட்டி அவனெறிந்த ஈட்டி
ஈட்டியிருக்கிறது தங்கத்தை
மகிழச்செய்திருக்கிறது நம் நெஞ்சத்தை

ஆம்
இத்தகைய தங்கங்களால் தான்
இந்தியா ஒளிர்கிறது

தடைகள் பல கடந்து
தன் வெற்றியால் விடை தந்த அந்த புகழ்வீரனுக்கு
செம்மாந்த வணக்கங்கள்

வெற்றி எல்லையில் நிலங்குத்திய போது தான் இந்தியத்தாயின் அகம் மகிழ்ந்திருக்கும்

மக்கள் தொகையில் முதலிடம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்
பதக்கப்பட்டியலில் எங்கோ ஒரு மூலையில் தான் இன்னுமிருக்கிறோம்

பள்ளிகளில் மட்டுமல்ல பாரதத்திலும் விளையாட்டிற்கான பேரிடத்தை கட்டமைத்திடுவோம்

இங்கு
தங்கங்கள் குவிக்கக்கூடிய தங்கங்கள் உண்டு
அதனை இனங்கண்டு
வருவோம் இனியேனும் அவர்தம் திறமைகள் வெளிக்கொண்டு

விளையாட்டும் ஒரு கல்விதான்
அதற்கான இடத்தினை சுருக்காதிருப்பது காலத்தின் கட்டாயம்

சிபாரிசுகளும்
தலையீடுமில்லாத உண்மை வீரர்களினால் ஆடுகளங்கள் அலங்கரிக்கப்பட்டால்
இமயத்தை தொடும் வெற்றித்தங்கங்கள்
ஆம்
இது ஒட்டுமொத்த மக்களின் மன ஏக்கங்கள்

இப்போதைக்கு
தங்க மகனைக் கொண்டாடுவோம்
எதிர்வரும் காலங்களில் நம் நாட்டினை உலகு கொண்டாடட்டும்

இந்தியா ஒளிரட்டும்


JOIN KALVICHUDAR CHANNEL