இந்தியர்களான நமக்கு வாய்க்கு ருசியாக சாப்பிட்டு பழக்கம் இருப்பதால், வயிற்றைக் காய போட்டு எடையைக் குறைக்க முயற்சிப்பது மிகவும் கடினமாகத் தான் இருக்கும். தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் டயட் என்று சில சமயங்களில் சாப்பிடாமல் இருப்பார்கள். இப்படியெல்லாம் நடந்தால், எந்த ஒரு பலனும் கிடைக்காது. எனவே எப்போதும் மிகவும் ஸ்மார்ட்டாக செயல்பட வேண்டும்.
உடல் எடையை இழக்க, உங்களை நீங்களே பட்டினி போடுகிறீர்களா? இனி இந்த நிலை தேவையில்லை. இவ்வாறு செய்தால் உடலில் நீரின் அளவு குறைந்து எடையும் குறைவது போன்று தோன்றலாம் , ஆனால் குறைந்த வேகத்தில் உடல் எடை மிகவும் அதிகரித்து விடும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, எளிய வாழ்க்கை முறையை பின்பற்றினாலே எளிதில் எடையை குறைத்து விடலாம். எடையை குறைக்க உதவும் குறிப்புகளில் இதுவே மிக முக்கியமானது; முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், லீன் இறைச்சிகள், ஆரோக்கியமான கொழுப்புகளை உணவில் சேர்த்துக் கொள்வது மட்டும் முக்கியமல்ல. அவ்வாறு சேர்த்து கொள்ளும் உணவுகளை ஒரே நேரத்தில் அதிக அளவு உட்கொள்ளாமல், குறைவான அளவில் 5 முதல் 6 முறைகள் மெதுவாக நன்கு மென்று உட்கொண்டால் உடல் எடையை விரைவில் குறைத்து விடலாம்.
நம்மில் பலர் காலை உணவை தவிர்த்து விட்டால், கலோரி அளவுகளை குறைத்து உடல் எடையை குறைத்து விடலாம் என்ற தவறான விஷயத்தை உண்மை என நம்பிக்கொண்டு உள்ளனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் முக்கியமாக உட்கொள்ள வேண்டிய ஒரு உணவு, காலை உணவு ஆகும்; அதை ஒருபோதும் தவிர்க்கவோ, சாப்பிடாமல் தள்ளி வைக்கவோ கூடாது. ஒரு நாளில் ஒரு சில முறைகள் உணவு உட்கொண்டு உடலை இயக்கத்தில் வைக்க வேண்டியது அவசியம்; நீங்கள் காலை உணவை தவிர்த்தால், மதிய நேரத்தில் வழக்கத்தை விட அதிகமான பசி உணர்வு ஏற்பட்டு உங்களை அதிகம் உணவு உண்ண வைத்துவிடும். இது உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக அதிகரித்துவிடும்; மேலும் காலை உணவை தவிர்த்தால் அது உடலின் வளர்சிதை மாற்றத்தையும் மெதுவானதாக்கி விடும். ஒரு கிண்ணம் நிறைய முழு தானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட பால் பொருட்களை காலை உணவாக எடுத்துக் கொண்டு நம் நாளை தொடங்கலாம்.
உணவு பொருட்களை அதிகம் சமைத்தால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் நீங்கி விடும் அபாயம் உண்டு; அதிகம் சமைக்கப்பட்ட உணவுகளை உட்கொண்டால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், பசி உணர்வு ஏற்பட்டு நம்மை துரித உணவுகளை உண்ணத் தூண்டும். இதை தடுக்க வேண்டும் எனில்,உணவு பொருட்களை அதிகம் சமைத்து சாப்பிடாமல், பச்சையாகவோ அல்லது தேவையான அளவு சமைத்தோ சாப்பிட வேண்டும். ஆவியில் வேகவைத்த, பேக் செய்யப்பட்ட, நெருப்பில் சுட்ட காய்களை, இறைச்சிகளை, மீன்களை உட்கொள்வது நல்லது; இவ்வுணவுகளுக்கு சுவை சேர்க்க கலோரி குறைந்த மசாலாக்களை பயன்படுத்தலாம்.
இரவு தாமதமாக உட்கொண்டால் அது உடல் எடை அதிகரிப்பை ஏற்படுத்தி விட வாய்ப்புண்டு; பொதுவாகவே இரவு உணவை 7:30 மணிக்குள் உண்டு முடிக்க வேண்டியது மிக முக்கியம். மேலும் இரவு உணவுக்கு முன் நொறுக்குத்தீனி உண்ணும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்; இரவு உணவு உண்டு முடித்த பின் மூலிகை தேநீர் குடிப்பது நல்லது. மேலும் அதிக உணவு உண்பதை தடுக்க, இரவு உணவுக்கு பின்னர் பல் துலக்கி விட வேண்டும்.
நம்மில் பெரும்பாலானோர் உடலுக்கு தேவையான அளவு நீரை விட குறைவான அளவையே பருகி வருகிறோம்; ஓர் நாளைக்கு, ஒரு மனித உடலின் சராசரியான நீர்த்தேவை 3 முதல் 4 லிட்டர் ஆகும். வேலை செய்து அதிக வியர்வை வெளியேறினால், நிச்சயம் அதிக அளவு நீரை அதாவது 4 முதல் 5 லிட்டர் நீரை அருந்த வேண்டியது மிகவும் அவசியம். உடலுக்கு தேவையான அளவு நீரை குடிக்காவிட்டால் அது பசி உணர்வை ஏற்படுத்தி அதிக உணவை உண்ண வைத்துவிடும்; மேலும் சோர்வையும் ஏற்படுத்திவிடும். சரியான அளவு நீர் அருந்தாதது, உடலின் வளர்சிதை மாற்றத்தை நிறுத்தி - உடலில் கொழுப்பு இழப்பை தடுக்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ள போதுமான அளவு நீரை அருந்த வேண்டும்; ஆகவே தினமும் உடலுக்கு தேவையான அளவு நீரை குடிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, ஒவ்வொரு நாளையும் தொடங்குங்கள்.
காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிச அளவு அதிகரித்து, கொழுப்புக்கள் வேகமாக கரைக்கப்படும். அதிலும் அத்துடன் 1/2 ஸ்பூன் துருவிய இஞ்சி சேர்த்து கலந்து குடித்தால், உடல் எடை இன்னும் வேகமாக குறையும்.
காலையில் ஜூஸ் குடித்த பின், 1 மணிநேரம் கழித்து 5-6 பாதாமை சாப்பிட வேண்டும். 20 நிமிடம் கழித்து தான் காலை உணவை உட்கொள்ள வேண்டும். இதனால் பாதாமில் உள்ள நார்ச்சத்து, அதிக பசியைக் கட்டுப்படுத்தி, உண்ணும் போது அளவாக சாப்பிட உதவி புரியும்.
மாலையில் சுமார் 4 – 4.30 மணியளவில், புத்துணர்ச்சியூட்டும் வகையில் ஒரு கப் டீ குடிக்கலாம். ஆனால் அதில் பால் அல்லது சர்க்கரை சேர்க்கக்கூடாது. அத்துடன் 2 க்ரீம் கிராக்கர் பிஸ்கட்டுக்களை சாப்பிடலாம்.
