t> கல்விச்சுடர் தமிழகத்தில் மீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

10 September 2021

தமிழகத்தில் மீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,631 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 25 பேர் பலியாகினர்.

தமிழகத்தில் நேற்று 1,596 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 1,631 பேராக உயர்ந்துள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை (செப்.10) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிதாக 1,631 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,30,592-ஆக உயர்ந்துள்ளது.

இன்று பலி எண்ணிக்கை 25-ஆக குறைந்துள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,119-ஆக அதிகரித்துள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL