. -->

Now Online

FLASH NEWS


Friday 15 October 2021

அனைத்து ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் உடனடி கவனத்திற்கு



தற்போது ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன .
உதாரணத்திற்கு பூஜ்ஜியக் கலந்தாய்வு மற்றும் 10ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்கள் கட்டாய இடமாற்றம்.
இதில் பூஜ்ஜியக் கலந்தாய்வு வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வி ஆணையர் கூறியதாக தகவல்.

ஆனால் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு இடமாற்றம் என்பது கலந்தாய்வு நெறிமுறைகள் வெளியிடும் போதுதான் தெரியும்.

ஒவ்வொரு ஒன்றியங்களிலும், இடைநிலை ஆசிரியர்கள் முதல் முதுநிலை ஆசிரியர்கள் வரை சுமார் 40 சதவீத ஆசிரியர்கள் இருப்பர்.
அதிலும் தொடக்கக்கல்வித்துறையைப் பொறுத்த மட்டில் சுமார் 60 சதவீத ஆசிரியர்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பள்ளியில் பணிபுரிகின்றனர்.
இவர்களில் பெரும்பாலோனர் 50 முதல் 55 வயதினைக் கடந்தவர்கள்.

இவர்கள் அனைவரும் இதே பள்ளியில் தான் நாம் பணி நிறைவு பெறுவோம் என்னும் மனநிலைக்கு வந்திருப்பர்.
பெரும்பாலும் தமது குடியிருப்புகளையும் அருகருகே நிலையானதாக்கி கொண்டிருப்பர்.

இவர்களை கட்டாய இடமாற்றம் செய்வதால் என்ன லாபம் கிடைக்கப்போகிறது.
இதனால் ஆசிரியப் பெருமக்கள்தான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவர்.
அது மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.

நமது சங்கங்கள் இதன்மீது உடனடி நடவடிக்கை எடுத்து பள்ளிக்கல்வி ஆணையர்,செயலாளர்,
மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர், மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று ,
இதனை கலந்தாய்வு நெறிமுறைகளில் இடம்பெறாத அளவிற்கு முனைப்புடன் செயலாற்ற வேண்டும்.
அரசாணை வெளிவந்த பின்பு பார்த்துக்கொள்வோம் என்றிருந்தால் அது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனவே ஆசிரிய சங்கங்கள்   இப்பிரச்சினையைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைத்து ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.