. -->

Now Online

FLASH NEWS


Saturday 20 November 2021

சேற்றுப்புண்ணில் இருந்து கால்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி?


சேற்றுப்புண்ணால் அவதிப்படுபவர்களுக்கு என்ன தீர்வ

 சேற்றுப்புண்………
மழைக்கால நோய்களில் இல்லத்தரசிகளை அதிகம் தாக்குவது இந்த சேற்றுப்புண் தான். நடக்கவே முடியாத அளவுக்கு பாதிப்பை உண்டாக்கிவிடக்கூடிய இதை வீட்டு வைத்தியம் மூலம் எப்படி சரிசெய்வது……

#சேற்றுப்புண்ணுக்கு……

👉 #மருந்து_01

சேற்றுபுண், பித்த வெடிப்பு போக்க 

▶விளக்கெண்ணை - 50 g

▶நல்லெண்ணை - 10 g

▶தேங்காய் எண்ணை - 10 g

▶புன்னை எண்ணை - 10 g 

▶பிரம்ம தண்டு வேர் - சிறிது

▶கண்டகத்திரி இலை - சிறிது

▶கடுக்காய் தூள் - 1 Spoon

▶மஞ்சள் தூள் - 1 Spoon

▶தேன் மெழுகு- 10 g

-இரும்பு வாணலியில் தேன் மெழுகை தவிர மற்ற எல்லாவற்றையும் கலந்து  காய்ச்சவும்.

-சலசலப்பு ஒய்ந்த பிறகு சிறு தீயில்  மேலும் ஒரு 10 நிமிடம் காய்ச்சி இறக்கி வடிகட்டவும். (தண்ணீர் சிறிதும் இருக்க கூடாதுங்க)

-Double Boiling முறையில் தேன் மெழுகை உருக்கி வடிகட்டியை எண்ணையை சேர்த்து கலக்கவும். சூடுள்ள போதே கண்ணாடி டப்பியில் மாற்றவும்.

-பாதங்களை சுத்தம் செய்து பிறகு பயன்படுத்தவும். இக்களிம்பை ஒரு வாரம் தேய்த்து வர குணமாகும்.

 சேற்றுப் புண்ணுக்கு போட்டு வர குணமாகும்.

👉#மருந்து02

தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு,அரிப்பு, படர்தாமரை, எரிச்சல்,சேற்று புண் ஆகியவை சரியாக இயற்கை மூலிகை மருந்து தயாரிக்கும் முறை*

 தேவையான பொருட்கள

▶தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்

▶தேள் கொடுக்கு இலை - 5 எண்ணிக்கை

▶மஞ்சள் - 1/2 ஸ்பூன்

👉தயாரிக்கும் முறை

முதலில் தேள் கொடுக்கு இலையை அரைத்து கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் அரைத்த இலையை சேர்க்கவும். 
பின் மஞ்சள் சேர்த்து நன்றாக காய்ச்சி தையலாம் போன்ற பதத்திற்கு வந்தவுடன் இறக்கி கொள்ளவும். இதை தோலில் உள்ள புண்கள்,சிராய்வுகள், சொரி, அரிப்பு போன்ற வற்றில் தடவி வந்தால் எளிதில் குணமாக்கி விடலாம்.

 கடுக்காய்த் தோல் அரைத்து எடுத்து வேப்பஎண்ணெய் காய்ச்சி அதில் கலந்து  பூச சேற்றுப் புண் குறையும்.

வெண்ணீரில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் காலை நன்றாக நனைத்து எடுக்க சேற்றுபுண் குணமாகும்.

காய்ச்சிய வேப்ப எண்ணெய் தடவி வர சேற்றுப்புண் குணமாகும்.

 
கீழாநெல்லி இலையை மஞ்சள் சேர்த்து அரைத்து சேற்றுப்புண் உள்ள இடத்தில் ஐந்து நாட்கள் இரவில் தடவிவர சேற்றுப் புண் ஆறிவிடும்.

அரைக்கப்பட்ட மருதாணி இலை அல்லது தேனுடன் குழைக்கப்பட்ட மஞ்சள் தூள் போன்ற இயற்கை பொருட்களை கொண்டு 
வைத்தியங்கள் மூலம் இது குணப்படுத்தப்படலாம்.

கால் டம்ளர் நீரை கொதிக்க வைத்து மஞ்சள் தூளை குழைத்து வெதுவெதுப்பாக இருக்கும் போதே சேற்றுப்புண் மீது தடவி கொள்ள வேண்டும். இரவு முழுவதும் காய்ந்தால் மறுநாளே இந்த புண் ஓரளவு மட்டுப்படும்.

வேப்பிலையை சுத்தம் செய்து அம்மியில் வைத்து அரைத்து அதனுடன் மஞ்சளை சேர்த்து குழைத்து சேற்றுப்புண் இருக்கும் இடங்களில் தடவவேண்டும். இவை உடலை சுத்தம் செய்வது போன்று கால்களில் இருக்கும் பூஞ்சை தொற்றையும் சுத்தம் செய்யும்.

அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீர் சேர்த்து அதில் பிடியளவு உப்பு சேர்க்கவும். அதில் கால்களை நனைத்து ஊறவைத்து பத்து நிமிடங்கள் வரை வைத்திருந்து சுத்தமான துணியால் துடைத்து எடுக்கவும். அதன் பிறகு மருந்து வைக்கலாம்.

மருதாணி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து சேற்றுப்புண் இருக்கும் இடங்கள் முழுக்க தடவ வேண்டும். காலையில் எழுந்ததும் கால்களை கழுவி விடவும்.இரண்டே நாளில் மாற்றம் தெரியும்.

கால் விரல்கள் இடுக்குகளில் தேங்காயெண்ணெய் கலந்து பிறகு குளிக்கலாம். இன்னும் பாதுகாப்பு தேவையெனில் தேங்காயெண்ணெயோடு மஞ்சளை குழைத்தும் பூசி பிறகு குளிக்கலாம். அதற்கு மாற்றாக வேப்ப எண்ணெய் கலந்தும் பூசலாம்.

வெந்நீரில் சிறிதளவு உப்பு போட்டோ,  எலுமிச்சை பழச் சாறு கலந்தோ கால்களை கழுவலாம். 

ஒரு கைப்பிடி அளவு  வேப்பிலையுடன் நீர் சேர்த்து, அதை கொதிக்க வைத்த பின் அந்த நீரைக்கொண்டும் பாதங்களை கழுவலாம்.

வீட்டில் அரிசியை அலசும் தண்ணீரை சேகரித்து, அதை கொதிக்க வைத்து அந்த தண்ணீரை கொண்டு பாதங்களை கழுவிய  பின்பு  ஈரப்பதம் இல்லாமல் துடைத்து விட வேண்டும். 

தேங்காய் எண்ணெயுடன் மஞ்சளைக் சேர்த்து, குளிப்பதற்கு முன்பு, காலில் தடவிக் குளித்தால், சேற்றுப்புண் வராது.

 குழந்தைகளுக்கு காலில் சேற்றுப்புண்  வந்தால் சிறிதளவு வெண்ணெயைத் தடவலாம். இதனால் எரிச்சல் இல்லாமல் இருக்கும். 

ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும் 'சிந்துராதி லேபம்',  'மகாதிக்தக லேபம்' போன்ற மருத்துகளை காலை மாலை இரு வேளை பூசிக் கொள்ளலாம் சுத்தமான தேங்காய் எண்ணெயும் சூடு செய்து பூசலாம்.