t> கல்விச்சுடர் மதிய உணவை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

16 November 2021

மதிய உணவை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

தற்போதைய அவசர உலகில் பலருக்கும் காலையில் உணவு சாப்பிட பலருக்கும் நேரம் இருப்பதில்லை. அதனால் பலரும் மதியம் தான் சாவகாசமாக பிடித்த உணவுகளை ஒரு கட்டு கட்டுகின்றனர் . அதற்கேற்றார் போல அந்த சமயத்தில் அதிகம் பசியும் இருக்கும் .

இரவு வேளைகளில் வயிறு முட்ட உண்பது, மத்திய வேளைகளில் அசைவ அல்லது சைவ உணவு விடுதிகளில் நன்றாக உண்பது என்று நம்மில் பலருண்டு.


ஆனால், இவர்களில் பலர் தொடர்ந்து காலை உணவை தவிர்ப்பவராக இருக்கிறார்கள்.

காலை உணவை தவிர்த்தால், அன்றைய நாளுக்கு வேண்டிய ஆற்றல் இல்லாமல், நாள் முழுவதும் சோர்வுடன் தான் செயல்படக்கூடும். அதுமட்டுமின்றி, காலையில் கண்ட உணவுகளை உண்பதைத் தவிர்த்து, ஆரோக்கியமான காலை உணவைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டால் மட்டுமே, நல்ல பலனைப் பெற முடியும்.

மேலும், காலை உணவை தவிர்ப்பதால் நாள் முழுக்க உடல் சோர்வுடன் காணப்படும். காலை உணவை தவிர்ப்பவர்கள் உற்சாகத்தை விரைவில் இழந்து விடுவர் அவர்களால் தங்கள் பணிகளில் கவனம் செலுத்த முடியாது.

ஆனால், காலை உணவை தவிர்ப்பதன் மிகப் பெரிய ஆபத்து என்னவென்றால் தைராய்ட் சுரப்பி பாதிக்கப்படும். இதனால் விரைவில் தைராய்ட் பிரச்னைகள் ஏற்படும்.

மேலும், காலை உணவை தவிர்ப்பது அதீத உடல் சோர்வை ஏற்படுத்தும். இதன் விளைவு கடுமையான மன அழுத்தம் உண்டாகும். காலை உணவை தவிர்ப்பவர்களின் உடலில் இரத்தத்தின் சர்க்கரை அளவு குறைந்து காணப்படும். இதனால் மயக்கம், தளர்ச்சி, வாந்தி போன்ற ஒவ்வாமைகள் உடலை வாட்டும்.

வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள், தொடர் குமட்டால், அல்சர், மலச்சிக்கல் போன்றவை காலை உணவை தவிர்ப்பவர்களின் வீட்டை தட்டும்.

சுருங்க சொல்வதானால், பேரரசனாக காலை உணவை உண்டு, இளவரசனை போல மத்திய உணவையும், இரவு உணவை எளியவர் போல உண்பவர்கள் உடல் நலம் நன்றாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

அதே சமயம் கிடைத்த உணவுகளை எல்லாம் மதியம் சாப்பிட கூடாது.

மதியம் சாப்பிடக்கூடிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள் குறித்து காண்போம்.

பாலீஷ் செய்யப்பட்ட அரிசியைத் தவிர்த்துவிடுவது நல்லது. ஏனெனில், அரிசியை சுத்தப்படுத்த பலவிதமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அரிசி வெள்ளையாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நிலைகளில் திரும்பத் திரும்ப பாலீஷ் செய்யப்படுகிறது. இந்த வகை அரிசியில் சத்துக்கள் எதுவும் இருக்காது. மாறாக, உடலுக்கு ஊறுவிளைவிக்கும் ரசாயனங்களே அதிகம் இடம்பெற்று இருக்கும். அதனால் இதைச் சமைத்துச் சாப்பிடுவதால் எந்தவிதப் பலனும் இல்லை.

 

கைகுத்தல் அரிசியைப் பயன்படுத்தலாம். உடலுக்குத் தேவையான சத்துகள் இயற்கையாகவே இதில் நிறைந்திருக்கின்றன. இதைச் சாப்பிடுவதால், உடல் வலிமை பெறும்.

மதிய உணவில் அதிக அளவு நீர்ச் சத்துள்ள காய்களை சேர்த்துக்கொள்ளலாம் பூசணிக்காய், சுரைக்காய், பரங்கிக்காய் போன்றவை நம் உடலுக்கு நலம் பயக்கும் நீர்ச்சத்துள்ள காய்கள்.

எண்ணெயில் செய்யப்படும் பொரியல்களைத் தவிர்க்கலாம். அதிக அளவில் அவியல், கூட்டு போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.

மதிய உணவில் முட்டை சேர்த்துக்கொள்வது ஆரோக்கியம். நம் உடலுக்குத் தேவையான புரதச்சத்து கிடைக்கும்.

சிக்கன், மீன் போன்றவற்றையும் மதிய உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சாப்பிட்டது செரிமானம் ஆக தேவையான நேரம் கிடைக்கும். அசைவ உணவுகளான மீன் வறுவல், பிரியாணி போன்றவற்றைச சாப்பிட மதிய நேரமே ஏற்றது.

மைதாதாவில் தயாரிக்கப்படும் பரோட்டா, நாண் போன்றவற்றுக்கு மதிய வேளையில் `நோ' சொல்லுங்கள். அதற்குப் பதிலாக கோதுமையில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தி, ரொட்டி போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.

மதிய உணவில் அவசியம் இடம்பெறவேண்டிய ஒன்று, ரசம். இது, செரிமானம் சீராக நடைபெற உதவும். ரசத்தைப் போலவே சூப்பும் மதியம் சாப்பிடச் சிறந்தது.

தயிர் சாப்பிடுவது புத்துணர்ச்சி கிடைக்க வழிவகுக்கும். எனவே, தயிரைச் சேர்த்துக்கொள்ளலாம். செரிமானப் பிரச்னை உள்ளவர்கள், தயிர் ஆகாது என்பவர்கள் நீர்த்த மோரைச் சேர்த்துக் கொள்ளலாம்,

JOIN KALVICHUDAR CHANNEL