. -->

Now Online

FLASH NEWS


Tuesday 23 November 2021

பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பு இல்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் கடந்த ஆண்டைப் போலவே மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பு இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாள் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது. பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பில்லை.
தற்போதய நிலையில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டுமே அமரவைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுகிறது. 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உள்ளதால் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.


பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்வு என்பதால் 10, 12-ம் வகுப்பு மாணவர்களை மட்டும் தினமும் பள்ளிக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைந்ததும் பிற மாணவர்களுக்கும் சுழற்சி முறை வகுப்புகள் கைவிடப்படும். மேலும், 1098, 14417 ஆகிய உதவி எண்கள் குறித்த அறிவிப்பு அனைத்து வகுப்பறைகளிலும் ஒட்டப்படும் என்றார்.