தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் அதி கனமழை பெய்யும் என்பதால் இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் இன்னும் 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தெற்கு வங்கக் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி தமிழக கடற்கரையை நெருங்கி வரக்கூடும். இதன் காரணமாக 5 நாள்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. செவ்வாய்க்கிழமை (நவ.9) பலத்த மழையும், நவ.10, 11-ஆம் தேதிகளில் மிக பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.