t> கல்விச்சுடர் ஜனவரி 3 முதல் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சுழற்சி முறை இல்லை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

13 December 2021

ஜனவரி 3 முதல் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சுழற்சி முறை இல்லை

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு டிச.31ஆம் தேதி வரை நீட்டிப்பு




தமிழகத்தில் ஊரடங்கு டிச. 31 வரை நீட்டிப்பு:

சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.




கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 31.12.2021 மற்றும் 1.1.2022 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.

ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதிக்கப்படும்.

அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்திற்கும் கூட்ட அரங்குகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.


தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கின் காரணமாக பல மாதங்களாக பள்ளிகளுக்கு செல்லாததனால் மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளதையும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், 03.01.2022 முதல் அனைத்து உயர்நிலை / மேல்நிலை பள்ளிகள் ( 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மட்டும் ) , அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும்.

அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும். 

அனைத்து கடைகளும் , குளிர் சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு . கடைகளில் , சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.

கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது , ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும் .




JOIN KALVICHUDAR CHANNEL