கும்பகோணத்தில் படித்தார்.
பள்ளியில் படிக்கும்போதே கல்லூரி
மாணவர்களுக்கான எஸ்.எல்.
லோனியின் முக்கோணவியல்
மற்றும் அடிப்படை கணித
சூத்திரங்களைத் தொகுத்து
வழங்கிய ஜி.எஸ்.கார் என்பவரின்
புத்தகத்தை படித்து முடித்தவர்.
• சிக்கலான கணித உண்மைகளை மற்றவர் உதவியின்றி
தானே புரிந்துகொண்டார். கணக்கில் இருந்த அதிக
ஆர்வத்தால், ஆங்கிலப் பாடத்தில் 2, 3 முறை தோல்வி
அடைந்தார். அதற்குள் திருமணமும் ஆனது.
• மாணவர்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தார்.
பணக்காரர்களிடம் தன் கணித நோட்டுப் புத்தகங்களைக்
காட்டி உதவி கேட்டார்.
• 1912-ல் சென்னை துறைமுகத்தில் ரூ.25 சம்பளத்தில்
எழுத்தர் வேலை கிடைத்தது. அங்கு அதிகாரிகளாக
இருந்த நாராயண ஐயர், சர்.பிரான்சிஸ் இவரது
திறமையைப் பார்த்து வியந்தனர். அலுவலகத்தில்
வேலை பளுவைக் குறைத்து, கணித ஆராய்ச்சிக்கு
நேரம் ஒதுக்கிக் கொடுத்தனர். அப்போது, தான்
கண்டறிந்த சில அரிய கணித மாதிரிகளை இங்கிலாந்து
கணிதப் பேராசிரியர்களுக்கு அனுப்பினார்.
• இவற்றில் பல கடிதங்கள் குப்பைக் கூடைக்குப் போனது.
பேராசிரியர் ஹார்டி மட்டும் இவரது திறமையைப்
புரிந்துகொண்டார்.
• அவரது முயற்சியாலும் பலரது உதவியாலும் 1914ல்
இங்கிலாந்துக்கு புறப்பட்டார். கேம்ப்ரிட்ஜ் சென்றவுடன்
ஹார்டியுடன் சேர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்.
• டாக்டர் பட்டத்துக்கு இணையான டிரினிட்டி கல்லூரியின்
பி.ஏ. பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. 1917-ல்
உடல்நலம் பாதிக்கப்பட்டது.
மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டு, உடல்நிலை சற்று தேறியதும், மீண்டும்
ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.
• இந்தப் பிறவி மேதைக்கு 1918-ல் ராயல் சொசைட்டியின்
உறுப்பினர் என்ற கவுரவம் கிடைத்தது. அதோடு, நல்ல
சம்பளமும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வாய்ப்பும்
கிடைத்தது.
ஆனால், உடல்நிலை தொடர்ந்து
மோசமானதால் 1919-ல் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்.
படுக்கையில் கிடந்த நிலையிலும் பல ஆராய்ச்சிக்
கட்டுரைகளை வெளியிட்டார்.
• 1914 - 1918 இடையே 3 ஆயிரத்துக்கும் அதிகமான
புது கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்; 27 ஆய்வுக்
கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவரது ஆராய்ச்சிகளின்
அடிப்படைகள் இன்று இயற்பியல் முதல் மின்தொடர்பு
பொறியியல் வரை பல்வேறு
துறைகளில்
பயன்படுத்தப்படுகின்றன.
இவரது நோட்டுப் புத்தகங்கள், காகிதங்க எழுதிவைத்த
குறிப்புகளைத் தேடிக் கண்டுபிடித்து வெளியிடுவதில்
வாட்சன், ஆண்ட்ரூஸ், ப்ரூஸ் போன்ற கணித வல்லுநர்கள்
பல ஆண்டுகாலம் செலவிட்டனர். குறுகிய காலத்தில்
இவர் கண்டறிந்த கணித உண்மைகளை இன்னமும்
புரிந்துகொள்ள முடியாமல் உலகம் முழுவதும் பல
கணித வல்லுநர்கள் திணறுகின்றனர். 20-ம் நூற்றாண்டின்
இணையற்ற கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன்
33-வது வயதில் மறைந்தார்.
நன்றி ராஜலட்சுமி சிவலிங்கம்