தமிழக நிதிநிலை சீரானதும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். நான் உங்களில் ஒருவனாக இருப்பேன்; நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியன்; அவ்வளவு தான் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம். அரசு ஊழியர்கள் தான் அரசாங்கம், அவர்கள் இல்லை என்றால் அரசாங்கமே இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ம் மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அரசு ஊழியர்களுக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது எனவும் கூறினார்.
நான் உங்களில் ஒருவனாக இருப்பேன்; நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியன்; அவ்வளவு தான் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு.
போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் திமுக ஆட்சியில் கைவிடப்படும்.
அரசு ஊழியர்களுக்கு அதிகளவிலான சலுகைகளை வழங்கியது திமுக அரசு தான்.
அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு கருணை நிதி வழங்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
ஜி.எஸ்.டி. முதல் வெள்ள நிவாரண நிதிவரை ஒன்றிய அரசு சரியாக வழங்குவதில்லை.
கொத்தடிமைகளை போல் ஒன்றிய அரசிடம் கையேந்தும் நிலையில் மாநில அரசு உள்ளது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை சரியானதும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
DOWNLOAD CM SPEECH PDF FILE CLICK HERE