t> கல்விச்சுடர் பள்ளி ஆய்வக உதவியாளர்கள் சங்கம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

30 December 2021

பள்ளி ஆய்வக உதவியாளர்கள் சங்கம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு


தஞ்சைக்கு வருகை தந்த தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு அளவிலான
நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாநில தலைவர் ம.அர்ஜூன்
நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அதில் பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு
பணி வரையறை மற்றும் பதவி உயர்வு வழங்க வலியுறுத்தப்பட்டு இருந்தது. 

இதே மனு
பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில செயலாளர்
கு.நிர்மலாதேவி, மாநில பொருளாளர் து.ரகு, தஞ்சை மாவட்ட தலைவர் தி.வீரையன் மற்றும்
38 மாவட்டத்தை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

JOIN KALVICHUDAR CHANNEL