தமிழகத்தில் புதிதாக 619 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 619 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், கத்தாரிலிருந்து வந்தவர்கள் இருவர், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உக்ரைனிலிருந்து வந்தவர்கள் தலா ஒருவர், தில்லியிலிருந்து வந்தவர் ஒருவர் மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து வந்த இருவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,45,261 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 638 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 27,01,974 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 36,750 ஆக உயர்ந்துள்ளது