வகுப்பில் எல்லா மாணவர்கள் முன்னிலையிலும் தன்னைக் கண்டித்த ஆசிரியரைத் தாக்கியிருக்கும் மாணவனுக்கு
15 நாள் பள்ளி இடைநீக்கம்..
மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் மீதும் 17 B என நடவடிக்கை எடுத்திருக்கின்றது கிருஷ்ணகிரி
மாவட்டக் கல்வித்துறை..
ஆசிரியர் தண்டிப்பதற்கு தடை போட்டு வைத்திருக்கும் அரசு,
கண்டிப்பதற்கும் தடை போட்டால்
மாணவர்கள் தங்கள் விருப்பம்போல இருப்பதை வேடிக்கை பார்க்க வேண்டுமெனில்
பள்ளியில் பணியாற்றுவது ஆசிரியர்களா?
இல்லை
ஆண்ட்ராய்டு அலைபேசிகளா?
ஒரு குழந்தையை நல்வழிப்படுத்த
தாய், தந்தையர்
தன் பிள்ளைகளைக் கண்டிப்பது சரி என்றால்,
ஆசிரியர்கள் கண்டிப்பதென்பது மிகச்சரி..
ஆசிரியரைத் தாக்கிய மாணவனை
எந்த அரசுப்பள்ளிகளில் சேர இயலாத வகையில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இல்லையெனில் குறைந்தபட்சம் அப்பள்ளியிலிருந்தாவது நீக்கி இருக்க வேண்டும்.
ஆசிரியரைத் தாக்கிய மாணவன்
அதே பள்ளியில் நாயகனைப் போல வலம் வருவான்.
அடிவாங்கிய ஆசிரியர் குற்றவாளியைப் போல அப்பள்ளியில் வலம்வர வேண்டுமா?
ஓர் உயரதிகாரியை
அவருக்குக் கீழ் கடைநிலையில் பணியாற்றும் ஒழுங்கீனமான பணியாளர் ஒருவர்
தாக்கிவிட்டால்,
அடிவாங்கிய அதிகாரிக்கு மெமோவும்,
அடித்தவருக்கு இடைநீக்கமும்தான் வழங்குவார்களா?
மாணவர்களுக்குச் சுதந்திரம் வழங்குகிறேன் என்னும் பெயரில்
என்றைக்கு ஆசிரியர்களின் கைகளைக் கட்ட இந்தச் சமுதாயம்
முன் வந்ததோ!
அன்றே கல்விக்குப் படுகுழி தோண்டப்பட்டு விட்டது.
மூட்டைப்பூச்சிக்குப் பயந்து, வீட்டை எரிப்பதுபோல,
மாணவர்களது சுதந்திரம் என்னும் பெயரில்
ஆசிரியர்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்து,
தவறான முன்னுதாரங்களைப் பள்ளிகளில் ஏற்படுத்தினால் அதனது விலை இப்படியாகத்தான் இருக்கும்.
ஊதியம் தவிர்த்த
பிற எந்தப் பிரச்சினைகளுக்கும்,
எந்தவித எதிர்வினையும் இல்லாமல்,
தலையாட்ட மட்டுமே
பழகியிருக்கிறது ஆசிரியர் இனம் என்னும் கூற்று மனதில்
வந்துசெல்வதைத் தவிர்க்க முடியவில்லை.
உடனே நீக்க வேண்டும்
பள்ளியிலிருந்து
அம் மாணவனையும்,
திரும்பப்பெற வேண்டும்
ஆசிரியைக்கு வழங்கப்பட்ட
17 B ஆணையையும்...
களைகளைப் பறிக்கத் தவறினால்
பயிற்களும் களைகளால் கெடும்
சிகரம் சதிஷ்
எழுத்தாளர் - ஆசிரியர்