ஜன.,3 முதல் 15 - 18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட உள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.
அதில், தமிழகத்தில் சிறார்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு பள்ளிகளில் போதிய இடம் ஒதுக்க வேண்டும். பள்ளிகளில் தடுப்பூசி பணிகளை ஒருங்கிணைக்க ஆசிரியர் ஒருவரை தலைமையாசிரியர்கள் நியமிக்க வேண்டும். 2007 & அதற்கு முன் பிறந்த மாணவர்களின் விவரங்களை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
