t> கல்விச்சுடர் தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா? மாவட்ட வாரியான விவரம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

21 January 2022

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா? மாவட்ட வாரியான விவரம்


தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 29,870 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 28,561 ஆக பதிவாகி இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய தொற்று பாதிப்பு 29,870 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பான புள்ளிவிவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: 
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29,870 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 லட்சத்து 72 ஆயிரத்து 666 ஆக உயர்ந்துள்ளது. 
கொரோனா தொற்று பாதிப்புக்கு 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 37,145 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவிலிருந்து மேலும் 21,684 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
 
சென்னையில் மட்டும் ஒருநாள் பாதிப்பு 7,038 ஆக உள்ளது. கொரோனா தொற்றுக்கு 14 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று 7520 ஆக இருந்த பாதிப்பு 7,038 ஆக குறைந்துள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL