தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 30,055 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி.
தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:
* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,11,270.
* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை: 5,98,82,950.
* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,40,062.
* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 31,94,260.
* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 30,055 .
* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 6241 .
* சென்னையில் இன்று சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 51613.
* தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 17,468 பேர். பெண்கள் 12,587 பேர். மூன்றாம் பாலினத்தவர் யாருமில்லை.
* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 25,221 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 29,45,678 பேர்.
* இன்று நோய்த் தொற்றினால் 48 பேர் உயிரிழந்தனர். 26 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 22 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37,312 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 8853 பேர் உயிரிழந்துள்ளனர்.