தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 19,280 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி.
தமிழ்நாட்டில் புதிதாக 19,280 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. 1,22,105 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 19,280 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 25,056 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 13 பேர், தனியார் மருத்துவமனைகளில் 7 பேர் என மொத்தம் 20 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 31,09,526 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 37,564 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி1,98,130 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.