ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு நாளில் சென்னை புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நாளில் பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை புறநகர் ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை ரயில்வே கோட்டமேலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஞாயிற்றுக்கிழமை சென்னை புறநகர் ரயில் சேவைகள் கரோனா கட்டுப்பாடுகளுடன் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை – அரக்கோணம், சென்னை – கும்மிடிப்பூண்டி, சென்னை – வேளச்சேரி, சென்னை – செங்கல்பட்டு வழித்தடங்களில் புறநகர் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
பயணிகள் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.