t> கல்விச்சுடர் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியலை வெளியீடு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

19 January 2022

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியலை வெளியீடு

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்ரமணியன்


நீட் தேர்வில் தாமதம், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு, ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட காரணங்களால், மருத்துவ படிப்புகளுக்கு 2021-22 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களுக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். இதன்படி மாநில இடங்கள் 1,163 மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 1,053 இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
இதனையடுத்து நிருபர்கள் சந்திப்பில் பேசிய மா. சுப்பிரமணியன், “ தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கான முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது. மேலும் வருகிற 27ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜனவரி 28 மற்றும் 29ஆம் தேதிகளில் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இடஒதுக்கீட்டின் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. பொது கலந்தாய்வு ஜனவரி 30ஆம் தேதி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.   


JOIN KALVICHUDAR CHANNEL