t> கல்விச்சுடர் நாளை முதல் மெட்ரோ ரெயில் சேவை நேரம் மாற்றம்..! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

16 March 2022

நாளை முதல் மெட்ரோ ரெயில் சேவை நேரம் மாற்றம்..!



தமிழகத்தின் தலைநகர் சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரெயில் சேவையை தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ ரெயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நாளை முதல் (17.03.2022) வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார நாட்களில் (திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை) நெரிசல் மிகுந்த நேரங்களில் 5 நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL