t> கல்விச்சுடர் வங்கக்கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

17 March 2022

வங்கக்கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்பு


வங்கக்கடலில் நேற்று முன்தினம் மாலை உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) வலுப்பெறக்கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து, வடக்கு, வடமேற்கு திசையில் அந்தமான் கடல் வழியாக நகர்ந்து, 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தாழ்வு மண்டலமாகவும், அது மேலும் புயலாகவும் வலுப்பெற்று, வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடலோர பகுதியில் 23-ந்தேதி நிலைபெற வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 இதன் காரணமாக தமிழகத்துக்கு பெரியளவில் மழை இருக்காது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

JOIN KALVICHUDAR CHANNEL