t> கல்விச்சுடர் Gpay, PhonePe-க்கு போட்டியாக களமிறங்கும் TATA! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

17 March 2022

Gpay, PhonePe-க்கு போட்டியாக களமிறங்கும் TATA!




இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் பெரிய நிறுவனமான டாடா, ஆன்லைன் பேமண்ட் துறையிலும் களமிறங்க உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமம், உப்பு முதல் இரும்பு வரை பல துறைகளில் சந்தையில் முன்னணியில் உள்ளது. தற்போது ஆன்லைன் பேமண்ட் துறையில் டாடா குழுமமும் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. ஆன்லைன் பேமண்ட் பொருத்தவரை மக்கள் பயன்பாட்டில் உச்சத்தை தொட்டு இருப்பது போன் பே மற்றும் கூகுள் பே தான். இந்த செயலிகளுக்கு போட்டியாக தற்போது டாடா குழுமம் தனது சொந்த செயலியோடு களமிறங்க உள்ளது.
 இந்திய மக்களிடம் அன்றாட புழக்கத்தில் இருந்து வருகிறது ஆன்லைன் பேமண்ட். கடந்த சில ஆண்டுகளிலேயே இந்த துறை வரலாறு காணாத வளர்ச்சியையும் மக்களிடம் வரவேற்பையும் ஈட்டியுள்ளது. எளிதாக பேமண்ட் செய்யும் முறை தான் இதற்கான வெற்றியாக பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் பிப்ரவரியில் மட்டும், 450 கோடி முறை ஆன்லைன் பேமண்ட்கள் நடத்தப்பட்டதாகவும், அதில் ரூ. 8.26 லட்சம் கோடி வரை பண பரிவர்த்தனை நடந்திருப்பதாகவும் முக்கிய தரவுகள் கூறுகின்றது.
 
 போன் பே மற்றும் கூகுள் பே வங்கிகளின் தொடர்போடு தான் இந்த ஆன்லைன் பேமண்ட் வசதிகளை பயனாளர்களுக்கு வழங்கி வருகிறது. அதேபோல் டாடா குழுமமும் இந்த துறைக்கு ஐசிஐசிஐ வங்கியோடு இணைந்து இறங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பயனாளர்களுக்கான யூபிஐ வசதிகளை வழங்க இந்த செயலியானுது, தேசிய கொடுப்பனவு நிறுவனத்தின் (NPCI) அனுமதிக்காக தற்போது காத்திருக்கிறது.
 
 இந்தியாவில் பெரும்பாலான யூபிஐ பண பரிவர்த்தனைகள் கூகுள் பே மற்றும் போன் பே ஆகிய செயலிகளில் தான் நடைப்பெறுகிறது என்றும், அமேசான் பே, பேடிஎம், வாட்ஸப் பே ஆகிய செயலிகளுக்கான மார்க்கெட் சரிவை தான் சந்திக்கிறது என்றும், தற்போது இந்த போட்டியில் டாடா இணைந்தால் இந்த சந்தையில் வெகுவாக மாற்றம் ஏற்படும் எனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
 மேலும், இந்த செயலியானது அடுத்த மாதம் வெளியாகலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

JOIN KALVICHUDAR CHANNEL