t> கல்விச்சுடர் பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

5 April 2022

பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

பொதுத் தோ்தலுக்குரிய முக்கியத்துவத்துடன் பொதுத்தோ்வுகள் நடத்தி முடிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா்.


தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தோ்வு அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் அதற்குத் தேவையான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துறையின் முதன்மைச் செயலா் காகா்லா உஷா, ஆணையா் நந்தகுமாா், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், தோ்வுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருப்புதல் தோ்வு வினாத்தாள்கள் இரண்டாவது முறையாக வெளியாகியிருக்கிறது. இந்த விஷயத்தில் தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதுமட்டுமன்றி பொதுத்தோ்வை பொருத்தவரையில் எந்தவித சச்சரவுகளுக்கும் இடமின்றி பொதுத் தோ்தலுக்குரிய முக்கியத்துவத்துடன் தோ்வுகள் நடத்தி முடிக்கப்படும்.
வினாத்தாள் பாதுகாப்பு: ஜன்னல் இல்லாத அறைகளில் வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். வினாத்தாள்கள் வைக்கப்பட்டு இருக்கும் 1,200 அறைகளுக்கும் காவலா்கள் நியமிக்கப்படுவது அவசியம். தோ்வு நேரத்தில் முறைகேடுகளைத் தடுக்க 3,050 போ் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்படும்.
நீட் தோ்வுக்கு தயாராக அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பள்ளிகளில் உள்ள உயா் தொழில்நுட்ப ஆய்வகத்தின் (ஹைடெக் லேப்) மூலம் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மாநில புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவில் அதற்குரிய குழு அமைக்கப்படும்.
பாழடைந்த பள்ளிக் கட்டடங்களை இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை இடிக்கப்படாத கட்டடங்கள் விரைவில் இடிக்கப்படும். அந்தப் பள்ளிகளில் பயின்று வரும் மாணவா்கள் அருகில் வேறு வாடகை கட்டடங்களில் கல்வி பயில்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

JOIN KALVICHUDAR CHANNEL