t> கல்விச்சுடர் சரியாகத் தூங்காத பெண்களுக்கு உடல் எடை கூடும்.. - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

23 May 2022

சரியாகத் தூங்காத பெண்களுக்கு உடல் எடை கூடும்..



எடை குறைய உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என பலர் முயற்சித்து கொண்டிருக்கையில், ஒழுங்கான தூக்கமும் வேண்டும் என புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது. முறையான தூக்கம் எப்படி எடையை குறைக்க உதவும் என்பதைப் பார்ப்போம்.

தூக்கமானது, பசியை தூண்டும் ஹார்மோன் செயல்பாட்டை சீராக்கும். தூக்கமின்மையால் அதிகம் சாப்பிட நேரிடும். சரியாகத் தூங்காத பெண்கள், முறையாக தூங்கும் பெண்களை விட 300 கலோரி அதிக உணவு உட்கொள்வதாகவும் ஆராயச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

தொப்பை வர, கவலையும் மன அழுத்தமும் முக்கிய காரணிகள். சரியாக தூங்கும்போது இவை இரண்டையும் விரட்டலாம்.

7 முதல் 9 மணி நேரம் வரை தூங்கும் பெண்களை விட குறைவான நேரம் உறங்கும் பெண்களுக்கு எடை வேகமாக கூடுகிறது.

7 மணி நேரத்திற்கு குறைவாகவோ, 9 மணி நேரத்திற்கு அதிகமாகவோ தூங்குபவர்கள், மற்றவர்களைவிட, பருமனாகவும், எடை போடவும் அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இரவு நன்றாக உறங்கும்போது, அடுத்த ஒரு நாள் முழுவதுக்கும் தேவையான ஆற்றல் கிடைக்கும். 

உடற்பயிற்சி தூக்கத்தை சீராக்க உதவும் என்பதால், நம் தூங்கும் முறையை சரி செய்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஆரம்பிக்கலாம்.




JOIN KALVICHUDAR CHANNEL