2021-22ஆம் ஆண்டிற்கான அரசு பொதுத் தேர்வுகள் மற்றும் ஆண்டு இறுதி தேர்வுக்கான கால அட்டவணை - கடந்த 25.02.2022 அன்று பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட மேற்காண் அறிவிப்பின் அடிப்படையில் தான் பல்வேறு ஊடகங்களில் இன்று இறுதி வேலை நாள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது!!
1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை!
விடுமுறைக்குப் பின் ஜூன் 13ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்.
ஜூன் 23ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
-பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
நடப்பாண்டில் பள்ளி பொதுத் தேர்வுகள் இந்த மாத இறுதி வரை நடைபெறுகின்றன. இதனால் இந்த பள்ளி கோடை விடுமுறை நாட்கள் தள்ளிப் போவதுடன் குறைந்துள்ளது.
இந்நிலையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒன்று முதல் 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு வரும் மே 14 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறைக்குப் பின்னர் ஜூன் 13ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜூன் 23 ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், பிளஸ் 1 வகுப்புகளுக்கு ஜூன் 24 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை, தெரிவித்துள்ளது.


