அளவிலான போட்டிகள் நடத்தப்படும்.
கல்வி, விளையாட்டுத் திறன்களில் சிறந்து விளங்கும்
மாணவர்கள் உலக, இந்திய, மாநில அளவில் கல்விச் சுற்றுலா
அழைத்துச் செல்லப்படுவர்.
கோடை விடுமுறையில் மலை சுற்றுலாத் தளங்களில் கோடை
கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்தப்படும்.
செயல்வழிக்கற்றலை ஊக்கும்விக்கும் வகையில் பள்ளிகள் தோறும்
காய்கறித் தோட்டங்கள் ஏற்படுத்தப்படும்.
மாதந்தோறும் பெற்றோர்-ஆசிரியர்-மாணவர் சந்திப்பு பள்ளி
மேலாண்மைக் குழு உறுதுணையுடன் நடத்தப்படும்.
போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் தடுத்தல்,
தன்சுத்தம் பேணுதல் குறித்து விழிப்புணர்வு
மனநல ஆலோசனை தேவைப்படும்.
மாணவர்களுக்கு, பள்ளி
தலைமை ஆசிரியரின் பரிந்துரையின் பேரில் நிபுணர்களைக்
கொண்டு மனநல ஆலோசனை வழங்கப்படும்.
மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவித்து அவர்தம்
படைப்புத் திறனை வெளிக்கொணரும் வகையில்
மாணவர்களுக்கென இதழ்கள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.