. -->

Now Online

FLASH NEWS


Friday 20 May 2022

TNPSC தேர்வு அறையில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் !!



1. *கருப்பு பந்து முனை பேனாவினால் (Black BALL POINT PEN ) மட்டுமே shade செய்ய வேண்டும்.

2. *ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் SHADE செய்து இருந்தால் இரண்டு மதிப்பெண்கள் குறைக்கப் படும்.

*3. விடைகளில் A எண்ணிக்கை B எண்ணிக்கை C எண்ணிக்கை D எண்ணிக்கை E எண்ணிக்கை சரியாக குறிப்பிட வேண்டும்.

*தேர்வருக்கு விடை தெரியவில்லை எனில் E shade செய்ய வேண்டும்.
 
*தேர்வர்கள் இந்த எண்ணிக்கையை ROUGH ஆக எழுதி பின் OMR இல் பதிவு செய்ய வேண்டும்.
*எண்ணிக்கை தவறாகக் குறிப்பிட்டு இருந்தால் OVER WRITE பண்ணலாம்.
*அறை கண்காணிப்பாளர் இந்த எண்ணிக்கை சரியாக உள்ளதா என ஒரு முறை எண்ணிப் பார்த்து கையொப்பமிட வேண்டும். *இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் அறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

*4. தேர்வு முடிவுற்றவுடன் OMR இல் தேர்வு எழுதுபவரின் இடது கை பெருவிரல் ரேகை பெறவேண்டும் கையொப்பம் பெற வேண்டும். அறை கண்காணிப்பாளர் கையொப்பமிட வேண்டும்.

*5. தேர்வர்களின் HALL TICKET PHOTO வை பார்த்து சரியான நபர் தான் என்பதை அறிந்து அனுமதிக்க வேண்டும்.

*தேர்வர்கள் வாட்டர் கேன், ID PROOF, HALL TICKET மற்றும் MASK வைத்துக் கொள்ள அனுமதிக்கலாம்.

6. *PENCIL, ERASER, CORRECTION fluid, ELECTRONIC GADGETS such as MOBILE PHONE, WATCH, BLUETOOTH DEVICE, CALCULATOR ..... அனுமதி இல்லை, எந்த ஒரு ELECTRONICS சாதனங்களும் அனுமதி இல்லை. சந்தேகத்துக்கிடமான Watch அணிந்திருந்தால் அதை கழட்டி வைத்து விட்டு வர வேண்டும்.

*CELLPHONE, புத்தக பை அனைத்து தேர்வுக்கு ஒதுக்கப் பட்ட அறையில் வைக்க வேண்டும்.

*7. தேர்வரை தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை.

8.*Rest Room செல்ல அனுமதி இல்லை.

9.*12:45 மணிக்கு முன்னர் செல்ல அனுமதி இல்லை அவ்வாறு மீறி சென்றால் வாழ் நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப் படும்.

*10. OMR sheet இரண்டு பக்கம் இருக்கும்

  *1. PERSONALISED OMR portions.

   *2. ANSWER portion of “USED” OMR Answer Sheets.

*தேர்வு முடிவுற்றவுடன் OMR இன் இரண்டு Portion ஐயும் தனித் தனியாக பிரித்து Chief இடம் ஒப்படைக்க வேண்டும்.

*Seating Plan W Shaped

*11. அறை கண்காணிப்பாளர் 8:15 மணிக்கு venue இல் /பள்ளியில் இருக்க வேண்டும்.

*8:45 மணிக்கு தேர்வு அறையில் இருக்க வேண்டும். செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

*9:00 மணிக்கு தேர்வர்கள் தேர்வு அறையில் அமர வேண்டும்.

*முதன்மை கண்காணிப்பாளர் 9 மணிக்கு கேள்வித்தாள் Bundle பிரித்து அறை கண்காணிப்பதற்கு அளிக்க வேண்டும்.

 *9:15 மணிக்கு இரண்டு தேர்வர்களிடம் கையொப்பம் பெற்று அறை கண்காணிப்பாளர்கள் தேர்வர்கள் இடம் கேள்வித் தாள்களை கொடுக்க வேண்டும். ஏதேனும் குறைபாடு உடைய Question booklet இருந்தால் வேறு Question Booklet கொடுக்கப்பட வேண்டும்.

*Question booklet இல் எந்த ஒரு டிக் mark எந்தவொரு குறியீடும் இடக் கூடாது. அவ்வாறு செய்தால் TNPSC ஆல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படும்.

*9:00 மணிக்கு short bell அடிக்கப்படும் OMR sheet தேர்வர்களுக்கு வழங்க வேண்டும்.

*Attendance தேர்வரின் கையொப்பம் பெற வேண்டும் hall sketch fill செய்ய வேண்டும்.

*Absent தேர்வர்களின் OMR part I red ball point ஆல் குறுக்கு கோடு இடப்பட்டு அறை கண்காணிப்பாளர் கையொப்பம் இட வேண்டும்.

*9:15 மணிக்கு short bell அடிக்கப்படும் Question Booklet தேர்வர்களுக்கு வழங்க வேண்டும்.

*ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் Short bell அடிக்கப் படும்.

*12:20 Warning Short Bell அடிக்கப் படும்.

*12:30 மணிக்கு Long bell அடிக்கப் படும்.
*OMR sheet இல் Personalised portion இல் விடைகளில் A எண்ணிக்கை B எண்ணிக்கை C எண்ணிக்கை D எண்ணிக்கை E எண்ணிக்கை சரியாக குறிப்பிட வேண்டும்.

*12:45 மணிக்கு Over bell (Long bell) அடிக்கப் படும் !!!.

 *12:45 மணிக்கு மேல் தான் தேர்வர்களைத் தேர்வு அறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும் !!!.