📌நாளை பள்ளிகள் திறப்பதால் பின்வரும் செயல்பாடுகளை தவறாது பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
📍 தங்கள் பள்ளியின் இறுதி வகுப்பு மாணவர்கள் அனைவரும்
Common Pool க்கு அனுப்பப்பட்டு TC Generate செய்ய தயார் நிலையில் இருக்க வேண்டும்/செய்யப்பட்டிருக்க வேண்டும்.
👉 *தொடக்கப் பள்ளிகள் - 5 ஆம் வகுப்பு.
👉 *நடுநிலைப் பள்ளிகள் - 8 ஆம் வகுப்பு.
👉 *உயர்நிலைப் பள்ளிகள் - 10 ஆம் வகுப்பு.
👉 *மேல்நிலைப் பள்ளிகள் - 10 மற்றும் 12 ஆம் வகுப்புகள்.
12 ஆம் வகுப்பு அனுப்பினால் மட்டுமே 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பதிவு செய்ய முடியும்.
📍 *இறுதி வகுப்புகளை Common Pool அனுப்பினால் தான் மற்ற வகுப்புகளுக்கு Promotion அளிக்க முடியும்.
📍இதர வகுப்புகளுக்கு promotion state level நடைபெறுவதால் terminal வகுப்புகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
📍 தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்களும்
TNSED Schools app (Latest version ) ஐ தங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டும்.
📍மாநில/ மாவட்ட திட்ட அலுவலகத்தில் தகவல் தெரிவித்ததுடன் பதிவு செய்ய தயார் நிலையில் இருக்க வேண்டும்.
📍EMIS இணையதளத்தில் ஒவ்வொரு வகுப்புக்கும் அந்த வகுப்பிற்கான வகுப்பாசிரியர் class & section பதிவு செய்து தயார் நிலையில் இருக்க வேண்டும்.
📍மாணவர்கள் சேர்க்கையின் போது admit செய்யும் போது ஒவ்வொரு updation செய்த பின்பு contrl+ shift+R (refresh) செய்ய வேண்டும்.
📍 ஒவ்வொரு வகுப்பின்
*கடந்த ஆண்டு வருகைப் பதிவேடு,
இந்த ஆண்டு புதிய வருகைப் பதிவேடு மற்றும் EMIS ல் உள்ள மாணவர்கள் பட்டியல் ஆகியவைகளில் உள்ள எண்ணிக்கை மற்றும் மாணவர்களின் பெயர் அனைத்தும் சரியாக முழுமையாக பொருந்தி இருக்க வேண்டும்.
📍 அனைத்து வகுப்புகளுக்கும் Promotion கொடுத்த பின்னர் ஒவ்வொரு வகுப்பின் பெயர்பட்டியலையும் EMIS இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அதனை வருகைப் பதிவேட்டோடு ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும்.
📍EMIS இணையதளத்தில் தலைமை ஆசிரியர்,
ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் எவரும் விடுபடாமல் அனைவரின் பெயர் மற்றும் விபரம் உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
( *அசல் பதிவேடு & அளவைப் பதிவேடு ஆகியவற்றோடு ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் )
📍ஒவ்வொரு நாளும் தவறாது EMIS App ல்
பின்வரும் வருகைப் பதிவை காலை 10.00 -க்குள் முடிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும்.
👉 **தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் வருகைப் பதிவு.
👉 *மாணவர்கள் வருகைப் பதிவு.
👉 *தூய்மைப் பணியாளர்கள் வருகைப் பதிவு.
*முதன்மைக் கல்வி அலுவலர்,
*விழுப்புரம் .