நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த முர்மு, பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் பெண் குடியரசுத் தலைவராக பதவியேற்க உள்ளார். வரும் 25ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ள வண்ணமிகு விழாவில் அவர் பதவியேற்கிறார்.
நாட்டின் 15வது குடியரசுத் தலைவர் தேர்வுக்கான வாக்குப்பதிவு கடந்த திங்கட்கிழமை நடந்து முடிந்த நிலையில், தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவர் பதவியேற்க உள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை தோற்கடித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில்பதிவானசெல்லுபடியாகும் வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 3219, மொத்த மதிப்பு 8,38,839; இதில் திரௌபதி முர்மு 5,77,777 வாக்குகள் மதிப்பிலான 2161 வாக்குகள் பெற்றார். யஷ்வந்த் சின்ஹா 2,61,062 வாக்குகள் மதிப்புள்ள 1058 வாக்குகள் பெற்றதாக மாநிலங்களவை பொதுச் செயலாளர் பிசி மோடி தெரிவித்தார்.
