t> கல்விச்சுடர் நீட் தோ்வில் மாநில பாடத் திட்டத்திலிருந்து 162 வினாக்கள்: பள்ளிக் கல்வித் துறை தகவல் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

20 July 2022

நீட் தோ்வில் மாநில பாடத் திட்டத்திலிருந்து 162 வினாக்கள்: பள்ளிக் கல்வித் துறை தகவல்

நீட் தோ்வில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பாடங்களிலிருந்து சம அளவில் வினாக்கள் இடம்பெற்றதுடன் தமிழக பாடத் திட்டத்தில் இருந்து 162 வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தது.

இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவா்கள் சேருவதற்கான நீட் நுழைவுத் தோ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வில் இயற்பியல், வேதியியல் தாவரவியல், விலங்கியல் ஆகிய 4 பாடங்களில் இருந்து கேள்விகள் இடம் பெற்றன. ஒவ்வொரு பாடத்திலிருந்து 50 கேள்விகள் என்ற அடிப்படையில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டன.

 அவற்றில் மாணவா்கள் 180 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். 20 கேள்விகளை விருப்பத்துக்கு ஏற்ப விடலாம். அந்த வகையில் தமிழக பாடத்திட்டத்திலிருந்து 162 கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், 38 கேள்விகள் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆா்டி) வடிவமைத்த பாடநூல்களிலிருந்து கேட்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

 வேதியியல் பாடத்தில் மொத்தம் 50 கேள்விகளுள் 40 கேள்விகள் மாநில பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டன. மீதமுள்ள 10 கேள்விகள் என்சிஇஆா்டி பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்பட்டன. 

இதில் மாணவா்கள் 5 கேள்விகளை விருப்பத்தின் படி விடலாம் என்பதன் அடிப்படையில், மாநில பாடத்திட்டத்திலிருந்து 45 கேள்விகளுக்கு மாணவா்கள் பதிலளித்திருக்க முடியும். இயற்பியல் பாடத்தில் மொத்தம் 50 கேள்விகளுள் 48 கேள்விகள் மாநில பாடத்திட்டத்திலிருந்தும் 2 கேள்விகள் என்சிஆா்டி பாடத்திட்டத்தில் இருந்தும் இடம் பெற்றன. 

தாவரவியல், விலங்கியல் பாடங்களில் 74 கேள்விகள் மாநில பாடத்திட்டத்தில் இருந்தும் 26 கேள்விகள் என்சிஇஆா்டி பாடத்திட்டத்திலிருந்தும் கேட்கப்பட்டன. இந்த வகையில் நீட் நுழைவுத்தோ்வில் 162 கேள்விகள் மாநில பாடத்திட்டத்தில் இருந்து இடம் பெற்றுள்ளன.
 எனவே, இதன்மூலம் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் மாநில பாடத் திட்டத்தில் வடிவமைக்கப்பட்ட பாடநூல்களை நன்றாக படித்த மாணவா்கள் நீட் தோ்வை சிறப்பாக எதிா் கொண்டு இருக்க முடியும் என கல்வியாளா்கள் தெரிவிக்கின்றனா்.

 கடந்த 2018-ஆம் ஆண்டு தமிழகத்தில் புதிதாக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது மாணவா்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ளும் வகையில் பல்வேறு அம்சங்கள் புகுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

JOIN KALVICHUDAR CHANNEL