உலக செஸ் போட்டி முன்னிட்டு
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 28ம் தேதி உள்ளூர் விடுமுறை
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு வரும் 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை என தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அன்றைய தினம் அம்மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10 வரை நடக்கிறது.
