t> கல்விச்சுடர் தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

17 July 2022

தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது




தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் செயல்படாது என தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார். கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து தனியார் பள்ளிகள் மூடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே விதிகளை மீறி விடுமுறை விட்டால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரித்துள்ளது. முன் அனுமதி பெறாமல் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் விடுமுறை அறிவித்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள், வழக்கம் போல் நாளை தனியார் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.





JOIN KALVICHUDAR CHANNEL