1) Voter helpline ஆப் ஐ பதிவிறக்கம் செய்யவும். அதில் ரிஜிஸ்ட்ரேசன் மெனுவில் போனால், அதில் வரும் ஆப்சன்களில் கடைசியாக பார்ம் 6B இணைக்கும் ஆப்சன் உள்ளது. அங்கு நீங்கள் உபயோகப்படுத்தும் செல் நம்பர் கொடுத்து OTP பெற்று உள்ளே சென்றால் வாக்காளர் அடையாள அட்டை எண், மாநிலம் பதிய வேண்டும். உங்கள் வாக்காளர் அட்டை விவரம் வருகிறது. அதை சரிபார்த்து விட்டு அடுத்த கட்டம் போனால் பார்ம் 6B வருகிறது. அதில் ஆதார் எண், செல் போன், உங்கள் வாக்கு உள்ள கிராமத்தை பதிவிட்டு "submit" பட்டனை தட்டினால் வேலை முடியாந்தது. ஒரு செல்போனிலிருந்து அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் பதிவு செய்து விடலாம். அப்போது வரும் பதிவு எண்ணை குறித்துக் கொள்ளுங்கள்.
2) https://www.nvsp.in என்ற இணைய தளத்தில் Form 6B ஐ பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை சொந்த கையப்பமிட்ட நகல்களை வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது வாக்குசாவடி நிலை அலுவலருக்கு நேரிலோ, தபாலிலோ அனுப்பி வைக்கவும். இது நீங்கள் பதிவு செய்ததை ஆதரைஸ் செய்ய உதவும்.
முதலாவது உங்களால் செய்ய முடியவில்லை என்றால் இரண்டாவது உள்ளது மட்டும் செய்தால் போதும்...