t> கல்விச்சுடர் கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

23 October 2022

கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி!

 ‘டி-20’ உலக கோப்பை தொடரின் ‘சூப்பர் -12’ சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவில் ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் ‘சூப்பர்-12’ சுற்றில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இன்று (அக்.,23) மெல்போர்னில், தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.
இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, அந்த அணியின் இப்திகர் அகமது 51 ரன்களும், ஷன் மசூத் 52 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.




160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல், ரோகித் சர்மா களமிறங்கினர்.

ஆரம்பமே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 4 ரன்களுக்கு ராகுல், ரோகித், சூர்யகுமார் 15 ரன்களிலும், அக்சர் படேல் 2 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். 


6.1 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்து திணறியது. 

பாண்டியா, கோலி ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 15 ஓவரில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்துள்ளது. 30 பந்துகளில் 60 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் , பாக் வீரர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். 

19வது ஓவரில் கோலி 2 சிக்சர்களை பறக்கவிட்டார். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. 

 19.1 ஓவரில் பாண்டியா, தினேஷ் 19.5 ஓவரில் அவுட் ஆக, கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்டது. 

அப்போது, களத்தில் இருந்த அஸ்வின் 4 ரன் எடுத்து வெற்றி இலக்கான 160 ரன்னை இந்தியா எட்டியது. 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. 

கோலி 82 ரன்னுடன் களத்தில் இருந்து வெற்றிக்கு வித்திட்டார்.

JOIN KALVICHUDAR CHANNEL