குரு ஒருவர் பாத்திரம் ஒன்றை மாணவர்கள் முன் வைத்தார்.அதற்குள் பெரிய பெரிய
கற்களை வைத்தார்.ஐந்து கற்களை வைத்ததும் பாத்திரம் நிறைந்துவிட்டது.
குரு : பாத்திரம் நிறைந்துவிட்டதா ?
மாணவர்கள் : நிரம்பிவிட்டது.
குரு : இல்லை ....! என்று சொல்லி விட்டு சிறு சிறு கற்களை போட்டுக் குலுக்கி நிரப்பிவிட்டுக்
கேட்டார். இப்போது.,?
மாணவர்கள் : நிறைஞ்சிடுச்சி !
குரு : இல்லை ....எனக்கூறி மணலைக் கொட்டினார். கற்களுக்கு இடையே உள்ள
இடைவெளிகளில் மணல் போய் நிறைந்தது.
குரு கேட்காமலே மாணவர்கள் சொன்னார்கள் "முழுவதும் நிரம்பிவிட்டது என்று.
ஊஹூம் ...! என்ற குரு அடுத்ததாக நீரை ஊற்றினார்.மணல் இழுத்துக்கொண்டது.
தொடர்ந்து சீடர்களிடம் கேட்டார்.,இதிலிருந்து என்ன தெரிகிறது ?
"முயற்சி செய்தால் எதுவும் சாத்தியம்...! சொன்னார்கள் சீடர்கள்.
குரு கூறினார் உண்மைதான்...! ஆனால் அதைவிட முக்கியமா விஷயம்
பாத்திரத்தில் முதலில் மணலைக் கொட்டியிருந்தால் இந்தப் பெரிய கற்களை
வைக்கமுடியாமல் போயிருக்கும்..!
நம் மனமும் அப்படித்தான்.....
சின்ன சின்ன விஷயங்களை மனதுக்குள் போட்டு வைத்திருந்தால் பெரிய
விஷயங்களுக்கு இடமிருக்காது.
சிறிய விஷயங்களுக்கு அலட்டுபவர்களால் பெரிய காரியங்களைச் செய்ய இயலாது.