. -->

Now Online

FLASH NEWS


Thursday 19 January 2023

TN கிராம உதவியாளர் தேர்வு முடிவுகள் 2023 - அரசு அதிகாரப்பூர்வ வெளியீடு!



TN கிராம உதவியாளர் தேர்வு முடிவுகள் 2023 – அரசு அதிகாரப்பூர்வ வெளியீடு!

தமிழகத்தில் கிராம உதவியாளர் தேர்வுகள் கடந்த மாதம் நடந்துள்ள நிலையில், தேர்வின் முடிவுகள் தற்போது அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

TN கிராம உதவியாளர்:

தமிழக வருவாய்த்துறை கடந்த அக்டோபர் மாதம் கிராம உதவியாளர் பணிக்கான காலிப்பணியிடங்களை வெளியிட்டது. அறிவிப்பின் படி, மாநிலம் முழுவதும் மொத்தம் 2748 பேர் நியமனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான தேர்வுகள் 2022ம் ஆண்டு நடந்துள்ள நிலையில், அதற்கான முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், கிராம உதவியாளர் பணிக்கான தேர்வுகள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் என்ற இரண்டு நிலைகளில் நடந்தப்படும்.
நடப்பு ஆண்டிற்கான கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வுகள் தமிழகம் முழுவதும் டிசம்பர் 4ம் தேதி நடந்துள்ளது. அதன்பிறகு, நேர்காணல் டிசம்பர் இறுதி வாரம் முதல் ஜனவரி முதல் வாரம் வரை நடைபெற்றது. இந்நிலையில், தற்போது கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. மெரிட் அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் அனைத்தும் மாவட்ட வாரியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்வில் கலந்து கொண்டுள்ளவர்கள் அனைவரும் தங்களின் தேர்ச்சி குறித்த விவரங்களை https://www.tndistricts.nic.in/ என்ற தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.