t> கல்விச்சுடர் திடக்கழிவு மேலாண்மை திட்ட வள மீட்பு பூங்கா அமையவுள்ள இடத்தை மாற்ற மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

27 March 2023

திடக்கழிவு மேலாண்மை திட்ட வள மீட்பு பூங்கா அமையவுள்ள இடத்தை மாற்ற மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!




திருச்சிராப்பள்ளி திருவரம்பூர் தாலுகா கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி எழில் நகர் குடியிருப்போர் சங்கம், திருச்சி வளர்ச்சி குழுமம் சார்பில் திருச்சிராப்பள்ளி எழில் நகர் குடியிருப்புக்கு அருகில் மயானம் மற்றும் குளம் உள்ள பகுதி அருகே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வள மீட்பு பூங்கா அமைவதை இடமாற்றக்கோரி திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் குறைதீர் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி வளர்ச்சி குழும தலைவர் வழக்கறிஞர் திலிப், செயலர் யோகா விஜயகுமார், துணைத் தலைவர் தங்கமணி, லிவிங்ஸ்டன் தாஸ், திருவரம்பூர் ஒருங்கிணைப்பாளர் பிரேம்குமார், எழில் நகர் குடியிருப்போர் சங்கத் தலைவர் ஜெயராமன், பொதுச் செயலாளர் கயாஸ் அகமது, பொருளாளர் துரைராஜன், அமைப்புச்செயலாளர் மாறன், செயல் தலைவர்கள் அருள்ராஜ், கிரேசி துரைராஜன் உறுப்பினர்கள் ராஜ்குமார், ராஜவேலு, பத்மநாபன், துணைத் தலைவர்கள் மூர்த்தி, லூக்காஸ், துணை பொது செயலர்கள் பானுமதி, மோகன் தாஸ், அமைப்புச் செயலர்கள் சுமித்ரா, சுப்பிரமணியன், மாணிக்க விநாயகர், சலோமி, துரைராஜ் உட்பட எழில் நகர் ஆபிஸர் டவுன் பொதுமக்கள்,
மக்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் தர பாதிப்பு கழிவுகளின்
துர்நாற்றம், சுகாதாரக் சீர்கேடு,
தொற்றக்கூடிய நோய்களின் பரவல் உள்ளிட்ட ஆபத்து காரணிகளை எடுத்துரைத்து இடம் மாற்ற கோரிக்கை விடுத்தனர்.

JOIN KALVICHUDAR CHANNEL