கடந்த மார்ச் மாதம்13-ஆம் தேதி 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கிய நிலையில், ஏப்ரல் 3-ஆம் தேதி தேர்வுகள் நிறைவடைந்தது. வருகின்ற மே மாதம் தேர்வுகளின் முடிவுகள் வெளியாக உள்ளன.
இந்த நிலையில், நீலகிரியில் சாம்ராஜ் அரசு பள்ளியில் பிளஸ் 2 கணித தேர்வில் ஆசிரியர்கள் காப்பியடிக்க உதவியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த அதிகாரிகள் 5 ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.