காமராஜர் ஒரு நாள் தன் தோளில் வலது பக்கத்தில் துண்டு போடுவதற்கு பதில் இடது பக்கத்தில் போட்டு இருந்தார்.
உடனே பத்திரிகையாளர்கள் துண்டு மாற்றி போட்டுள்ளீர்கள். எதுவும் விஷேசமா? என்று கேட்டனர்.
காமராஜர் ஒன்றும் இல்லை. சும்மாதான் போட்டுள்ளேன் என்று சொன்னார்.
பத்திரிகையாளர்கள் விடவில்லை .துண்டு மாற்றி போட்டதற்கு காரணம் என்ன என்று துளைக்க ஆரம்பித்து விட்டனர் .
உடனே காமராஜர் ஒண்ணும் இல்லைய்யா.,இடது பக்கம் சட்டை லேசா கிழிந்துள்ளது.அதை மறைக்கத்தான் இடது பக்கம் துண்டை மாற்றிப் போட்டுள்ளேன். வேணும்ன்னா பாருங்கள் என்று துண்டை விட்டு, எடுத்து கிழிந்த சட்டையை காண்பித்தாராம்.
இவர் தான் உண்மையான மக்கள் தொண்டர்...
இன்றைய அரசியல்வாதிகள் பச்சை குத்துவதிலும்.. பால் காவடி தூக்குவதிலும்... ஸ்டிக்கர் ஓட்டுவதிலும்... குடும்பத்துடன் ஊழல் செய்வதிலும் பிசியாக உள்ளனர்...