தமிழகத்தில் அக்னி வெயில் முடிந்த பிறகும் கூட கடந்த நான்கு நாட்களாகவே தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி கண்டிப்பாக பள்ளி திறப்பை தள்ளி போட வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
இப்போது
வெயில் குறைவதற்கான
அறிகுறியே தென்படவில்லை. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து கொண்டே தான்
வருகிறது. அக்னி நட்சத்திரம்
முடிந்த பிறகும் வெயிலின் உக்கிரம் குறையவில்லை.
சென்னை உள்பட பல்வேறு
மாவட்டங்களில் 108
டிகிரிக்கு மேல் வெயில்
கொளுத்துகிறது. இயல்பாக
பதிவாகும் வெப்ப அளவை
விட கடந்த 4 நாட்களாக
வெப்பத்தின் அளவு அதிகமாகவே காணப்படுகிறது.
மீண்டும் தள்ளிபோகுமா?
இதனால் 7-ந்தேதி பள்ளிகள் திறப்பதை மறுபடியும் தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு மீண்டும் கோரிக்கைகள்
சென்ற வண்ணம் உள்ளது.
எனவே பள்ளிகள் திறப்பது
மீண்டும் தள்ளி
போகுமா? இல்லையா?
என்பது ஓரிரு நாளில்
தெரிய வரும்.